- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இனிமேலும் ராகுல் தேவையா? ரசிகர்கள் விளாசல்.. அம்பயருடன் வாதிட்டு மறுத்த ரோஹித், கோலி.. காரணம் என்ன?

பெங்களூருவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி இறுதிக்கட்டத்தை தொட்டுள்ளது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனால் சொந்த மண்ணில் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்து மோசமான சாதனை படைத்த இந்தியா இந்தப் போட்டியில் தோல்வியை சந்திக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஏனெனில் அடுத்ததாக பேட்டிங் செய்த நியூஸிலாந்து 402 ரன்கள் குவித்தது. அதைத் தொடர்ந்து 356 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் தவறை உணர்ந்து பொறுப்புடன் விளையாடி போராடியது. குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா 52, ஜெய்ஸ்வால் 35, விராட் கோலி 70 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.

- Advertisement -

ரசிகர்கள் விளாசல்:

அதை வீணடிக்காமல் மிடில் ஆர்டரில் சர்பராஸ் கான் 150, ரிஷப் பண்ட் 99 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தனர். அதனால் இந்தியா 200 ரன்களை இலக்காக நிர்ணயித்து வெற்றி பெறுவதற்கான பிரகாச வாய்ப்பு உருவானது. ஆனால் அடுத்ததாக வந்த கேஎல் ராகுல் 12, ஜடேஜா 5, அஸ்வின் 15 ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

அதில் அஸ்வின், ஜடேஜா முழுமையான பேட்ஸ்மேன்கள் கிடையாது என்பது மட்டுமின்றி சமீபத்திய வங்கதேச தொடரில் பெரிய ரன்கள் குவித்து அசத்தினார்கள். ஆனால் சமீப காலமாகவே தடுமாறி வரும் கே.எல் ராகுல் சுமாரான ஃபார்மில் இருக்கிறார். ஆனாலும் அனுபவத்தை மதித்து இப்போட்டியில் கொடுக்கப்பட்ட வாய்ப்பில் சொதப்பிய அவர் இந்தியா வெற்றி வாய்ப்பை நழுவ விட முக்கிய காரணமாக அமைந்துள்ளார்.

- Advertisement -

வாதிட்ட ரோஹித்:

எனவே இனிமேலும் இவர் தேவையா? அணியிலிருந்து கழற்றி விடுங்கள் என கேஎல் ராகுலை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விளாசி வருகின்றனர். இறுதியில் இந்தியாவை 462 ரன்களுக்கு சுருட்டிய நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி, வில்லியம் ஓரோர்கே தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதன் பின் 107 ரன்களை துரத்தத் துவங்கிய நியூசிலாந்து 0.4 பந்துகளில் 0-0 ரன்கள் எடுத்த போது வெளிச்சம் குறைந்தது.

இதையும் படிங்க: 46க்கு அவுட்டான பின்பும் இந்தியா 462 ரன்ஸ் மாஸ் கம்பேக்.. 130 வருட உலக சாதனையை சமன் செய்து அபாரம்

அதனால் நடுவர்கள் போட்டியை நிறுத்த விவாதித்தனர். ஆனால் அவர்களிடம் சென்ற இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போட்டியை தொடர்ந்து நடத்துங்கள் என்று வாதிட்டனர். குறிப்பாக மாலையிலேயே பந்து வீசி சில விக்கெட்டுகளை எடுத்தால் 5வது நாளில் வெற்றி வாய்ப்பு கிடைக்கலாம் எண்ணத்துடன் நடுவர்களிடம் வாதிட்ட அவர்கள் களத்திலிருந்து வெளியேற மறுத்தனர். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் மழை வந்ததால் 4வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. தற்சமயத்தில் நாளை மழை வந்தால் மட்டுமே இந்தியா தோல்வியிலிருந்து தப்பலாம்.

- Advertisement -