நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி அக்டோபர் 16ஆம் தேதி பெங்களூருவில் துவங்கியது. மழையால் தாமதமாக துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி சொந்த மண்ணில் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது.
அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 20 ரன்கள் நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளை எடுத்தனர். பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து டேவோன் கான்வே 91, ரச்சின் ரவீந்திரா 134 ரன்கள் எடுத்த உதவியுடன் 402 ரன்கள் குவித்தது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
மழை வருமா:
அதைத்தொடர்ந்து 356 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 52, ஜெய்ஸ்வால் 35, விராட் கோலி 70, சர்பராஸ் கான் 150, ரிஷப் பண்ட் 99 ரன்கள் குவித்தனர். அதன் காரணமாக முன்னிலை பெற்ற இந்தியா 200 ரன்களை இலக்காக நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராகுல், அஸ்வின், ஜடேஜா உள்ளிட்ட லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்கவில்லை.
அதனால் இந்தியாவை 462 ரன்களுக்கு கட்டுப்படுத்திய நியூசிலாந்துக்கு அதிகப்படுத்தமாக வில்லியம் ஓரோர்கே, மாட் ஹென்றி தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். இறுதியில் 107 என்ற சுலபமான இலக்கை துரத்தும் நியூசிலாந்து நான்காவது நாள் முடிவில் 0-0 ரன்கள் எடுத்துள்ளது. தற்சமயத்தில் நியூசிலாந்து வெற்றி பெறுவதற்கு பிரகாசமாக உள்ளதால் ஐந்தாவது நாளில் மழை வந்தால் மட்டுமே இந்தியாவின் தோல்வியை தவிர்க்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
கம்பேக் உலக சாதனை:
முன்னதாக இந்தப் போட்டியில் 46க்கு ஆல் அவுட்டான இந்தியாவை எதிரணி ரசிகர்கள் கிண்டலடித்தனர். அத்துடன் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2வது இன்னிங்ஸில் தவறை உணர்ந்து பொறுப்புடன் விளையாடிய இந்தியா முடிந்தளவுக்கு போராடி 462 ரன்கள் குவித்தது.
இதையும் படிங்க: ரஞ்சிக் கோப்பை: தமிழ்நாடு 674 ரன்ஸ்.. டெல்லியை சொந்த மண்ணில் புரட்டிய சுதர்சன், சுந்தர், ரஞ்சன் அபாரம்
இதன் வாயிலாக 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓரு போட்டியின் முதல் இன்னிங்ஸில் 100 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகியும் 2வது இன்னிங்ஸில் 450க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த அணி என்ற உலக சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது. இதற்கு முன் கடந்த 130 வருடங்களுக்கு முன் 1894ஆம் ஆண்டு மேல்போர்ன் நகரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து 75 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 475 ரன்கள் குவித்து கம்பேக் கொடுத்தது.



