IND vs WI : உங்களால் எப்போவுமே தோனியாக முடியாது, மெகா செல்பிஷாக நடந்து கொண்ட பாண்டியாவை – விளாசும் ரசிகர்கள், நடந்தது என்ன?

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் 2016க்குப்பின் முதல் முறையாக தோல்வியை சந்தித்த இந்தியா ஆரம்பத்திலேயே பின்னடைவுக்குள்ளானது. அந்த நிலைமையில் ஆகஸ்ட் 8ஆம் தேதி கயானாவில் நடைபெற்ற முக்கியமான 3வது போட்டியில் தொடரை வெல்ல நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கிய நிலையில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 159/5 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ப்ரெண்டன் கிங் 42 (42) ரன்களும் கேப்டன் ரோவ்மன் போவல் 40* (19) ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதை தொடர்ந்து 160 ரன்கள் துரத்திய இந்தியாவுக்கு அறிமுக போட்டியில் ஜெய்ஸ்வால் 1, சுப்மன் கில் 6 என தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் அடுத்ததாக களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் இந்த தொடரில் முதல் முறையாக தமக்கே உரித்தான சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு விரைவாக ரன்களை சேர்த்து 10 பவுண்டரி 4 சிக்சருடன் 83 (44) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்த ஆட்டமிழந்தார்.

- Advertisement -

செல்பிஷ் பாண்டியா:
அவருடன் மறுபுறம் அசத்திய இளம் வீரர் திலக் வர்மா 49* (37) ரன்களும் கேப்டன் ஹர்திக் பாண்டியா 20* (15) ரன்களும் எடுத்ததால் 17.5 ஓவர்களிலேயே 164/3 ரன்கள் எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்து நிம்மதியடைந்தது.முன்னதாக இப்போட்டியில் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிரடியாக விளையாடிய சூரியகுமாருடன் ஜோடி சேர்ந்த இளம் வீரர் திலக் வர்மா நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சரிவை சரி செய்து 3வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை தூக்கி நிறுத்தி வெற்றி பெறுவதற்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

சொல்லப் போனால் இந்த தொடரில் அறிமுகமான அவர் முதலிரண்டு போட்டிகளில் இதர வீரர்கள் திண்டாடிய போது சவாலான பிட்ச்சில் அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 39, 51 என்ற அதிக ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடினார். அதே போல இந்த போட்டியிலும் மிகச் சிறப்பாக செயல்பட்ட அவர் 4 பவுண்டரி 1 சிக்சருடன் ரோவ்மன் போவல் வீசிய 18வது ஓவரின் 4வது பந்தில் சிங்கிள் எடுத்து 49* ரன்களை தொட்டார்.

- Advertisement -

அப்போது இத்தொடர் முழுவதும் இந்தியாவை காப்பாற்றும் அளவுக்கு அசத்தி வரும் அவர் 50 ரன்களை தொடுவதற்கு எதிர்ப்புறம் இருந்த கேப்டன் பாண்டியா வழி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதாவது 5வது பந்தில் சிங்கிள் எடுத்தால் இந்தியாவின் ஸ்கோர் 158/3 என்ற நிலைமைக்கு வரும் என்பதால் கடைசிப் பந்தில் சிங்கிள் அல்லது பவுண்டரி அடித்து திலக் வர்மா ஃபினிஷிங் செய்து அரை சதத்தையும் தொடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் அதை செய்யாத பாண்டியா 5வது பந்தில் சிக்ஸர் அடித்து தனது பெயரில் சுயநலமாக ஃபினிஷிங் கொடுத்தார். அதை பார்த்த ரசிகர்கள் கடந்த 2 போட்டிகளில் உங்களுடைய வீரம் என்னவாயிற்று? கேப்டனாக இளம் வீரர் 50 ரன்கள் தொடுவதற்கு வாய்ப்பு கொடுக்க கூடாதா? என்று பாண்டியாவை விமர்சித்து வருகின்றனர். ஏனெனில் கடினமான போட்டியில் 50 ரன்களை எடுப்பது இளம் வீரருக்கு மேலும் உத்வேகத்தை கொடுத்து அடுத்த வரும் போட்டிகளில் இன்னும் சிறப்பாக செயல்பட உதவும் என்று ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

அதை விட 2014 டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான செமி ஃபைனலில் விராட் கோலி போராடி வெற்றியை கொண்டு வந்த போதிலும் ஃபினிஷிங் செய்யும் வாய்ப்பு தோனிக்கு கிடைத்தது. ஆனால் தம்மை விட வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய விராட் கோலி தான் ஃபினிஷிங் செய்ய வேண்டும் என்று கருதிய தோனி அடுத்த பந்தை அப்படியே தடுத்து விராட் கோலிக்கு வாய்ப்பு கொடுத்ததை மறக்க முடியாது.

இதையும் படிங்க:IND vs WI : உங்களால் எப்போவுமே தோனியாக முடியாது, மெகா செல்பிஷாக நடந்து கொண்ட பாண்டியாவை – விளாசும் ரசிகர்கள், நடந்தது என்ன?

அப்படி தோனி தம்முடைய ரோல் மாடல் என்று தெரிவிக்கும் நீங்கள் இந்த சாதாரண தொடரிலேயே இளம் வீரருக்கு இப்படி வாய்ப்பு கொடுக்காமல் சுயநலமாக நடந்து கொள்ளலாமா? என்று பாண்டியாவை செல்பிஷ் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சரமாரியாக திட்டி வருகின்றனர்.

Advertisement