டி20 உ.கோ வர்ணனையாளர்கள் பட்டியல் – ஐசிசி வெளியிட்ட சூப்பர் வீடியோவை பாராட்டும் ரசிகர்கள்

Ravi Shahstri Ian Smith Commentators
- Advertisement -

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த 2022 ஐசிசி டி20 உலக கோப்பை 2022 ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16ஆம் தேதியான இன்று கோலாகலமாகத் துவங்கியது. வரலாற்றில் 8வது முறையாக நடைபெறும் இத்தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு உலகின் டாப் 16 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கிட்டத்தட்ட ஒரு மாதம் திருவிழாவாக நடைபெறும் இத்தொடரில் தங்களது நாட்டுக்காக கோப்பையை வெல்வதற்கு அனைத்து வீரர்களும் முழுமூச்சுடன் முழு திறமையை வெளிப்படுத்தி போராட உள்ளனர். அதனால் இந்த இந்த தொடரில் அனல் பறக்கும் விறுவிறுப்பான திரில்லர் தருணங்களுக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோன்ற தருணங்களை தொலைக்காட்சியில் பார்க்கும் ரசிகர்களுக்கு துல்லியமாகவும் நுணுக்கங்களை வெளிப்படுத்தி வர்ணனை செய்து போட்டிகளை விளக்கும் வர்ணனையாளர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. பொதுவாக தொலைக்காட்சி கிரிக்கெட் போட்டிகளும் வர்ணனையும் உடலும் உயிரும் போல என்பார்கள். அந்த வகையில் தங்களது காந்தக் குரலால் வர்ணனை செய்யும் கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் ரசிகர்களின் காதில் தேனை பாய்ச்சுவார்கள் என்றே கூறலாம்.

- Advertisement -

அதிலும் மறைந்த டானி கிரேக், ரிச்சி பெனட் போன்ற ஜாம்பவான்களின் குரலுடன் கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பது ரசிகர்களுக்கு சொர்க்கமாக அமையும். அந்த வகையில் இந்த தொடரில் வர்ணனை செய்யப்போகும் நட்சத்திரங்களின் பட்டியலை அறிக்கையாக வெளியியாடாமல் ரசிகர்களை கவர்வதற்காக பிரத்தியேக வீடியோவாக ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த நவீன யுகத்தில் வாட்ஸ்அப் மிகவும் அவசியமாகியுள்ள நிலையில் அதை பயன்படுத்தியுள்ள ஐசிசி எமி ஜோன்ஸை வர்ணனையாளர்கள் குரூப் அட்மினாக நியமித்து அதில் வர்ணனையாளர்களை சேர்ப்பது போன்ற கலாட்டா வீடியோவை வெளியிட்டுள்ளது.

அசத்தல் வீடியோ:
அதில் ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் வாட்ஸ்அப் குரூப்பில் வர்ணனையாளர்களை இணைக்குமாறு கேட்டுக் கொண்டதையடுத்து எமி ஜோன்ஸ் புதிதாக ஒரு குரூப் உருவாக்கி அதில் முதலாவதாக இந்திய காந்தக் குரல் நாயகன் ரவி சாஸ்திரியை சேர்த்து, வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் இயன் பிஷப்பை இணைத்து, இந்தியாவின் குரல் என்றழைக்கப்படும் ஹர்ஷா போக்லேவை சேர்க்கிறார். அதைத்தொடர்ந்து நியூசிலாந்தின் மாயாஜால குரலை கொண்ட டேனி மோரிசன், இங்கிலாந்தின் மைக்கேல் அதர்டன், நடாலியா ஜெர்மனோஸ், ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன், மைக்கேல் கிளார்க், டிர்க் நானிஸ் ஆகியோரையும் சேர்க்கிறார்.

- Advertisement -

இதில் டேனி மொரிசன் அனைத்து அணிகளுக்கும் ஆதரவு கொடுக்கும் நிலையில் ஷேன் வாட்சன், மைக்கேல் கிளார்க் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவு கொடுக்கின்றனர். அதிலும் டிர்க் நானிஸ் நெதர்லாந்துக்கும் விளையாடியவர் என்பதால் இரு அணிகளுக்கும் ஆதரவு கொடுக்கிறார். அதுபோக இலங்கையின் ரசல் அர்னால்டு, இங்கிலாந்து வீராங்கனை ஈஷா குஹா, பிரஸ்டோன் மொம்சென் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ள அந்த குரூப்பில் 2016 உலக கோப்பை பைனலில் 4 சிக்சர்களை அடித்து கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீசின் கார்லஸ் பிரத்வெயிட் இணைகிறார்.

அப்போது “ரிமம்பர் தி நேம்” என்று இயன் பிஷப் கமெண்ட் போடும் நிலையில் இதர வர்ணனையாளர்கள் பதில் கமெண்ட் போடுகின்றனர். அப்போது உள்ளே வரும் டேல் ஸ்டெய்ன் இம்முறை கோப்பை தென் ஆப்பிரிக்காவுக்கே என்று நம்பிக்கையுடன் கூறுகிறார். அதற்கு ஜாம்பவான் ஷான் பொள்ளாக் ஆதரவு கொடுக்கும் நிலையில் வங்கதேசத்தின் அக்தர் அலி கான் நாங்களும் இருக்கிறோம் என்று கலாய்க்கிறார்.

- Advertisement -

அப்போது பாகிஸ்தானின் பாசித் கான் தங்களது அணிக்கு ஆதரவு கொடுக்கும் போது இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அக்டோபர் 23இல் சந்திப்போம் என்று பதிலடி கொடுக்கிறார். அதன்பின் சைமன் டௌல், இயன் ஸ்மித் ஆகியோர் நியூசிலாந்தை மறந்து விடாதீர்கள் என்று பேசும் போது அயர்லாந்தின் நெயில் ஓப்ராயன், மார்க் ஹோவார்ட், பிரையன் முர்காட்ரோட் ஆகியோரும் இந்த உலக கோப்பை வர்ணிக்க காத்திருப்பதாக இணைகிறார்கள்.

அப்போது வரும் இங்கிலாந்தின் நாசர் உசேன் சமீபத்தில் ஓய்வு பெற்ற இயன் மோர்கனை இணைக்கிறார். அப்போது 2016 பைனலில் 4 சிக்சர்களை அடித்ததை ப்ரத்வெய்ட் சுட்டிக் காட்டுவதால் இயன் மோர்கன் உடனடியாக குரூப்பிலிருந்து வெளியேறுகிறார்.

இதையும் படிங்க : டி20 உ.கோ’யில் விளையாடத் சரியானவர் யார்? டிகே – ரிஷப் பண்ட் தேர்வில் சுரேஷ் ரெய்னா கூறுவது இதோ

அதன்பின் மீண்டும் அவர் சேர்க்கப்படும் நிலையில் ஜாலியாகத்தான் வெளியேறினேன் என கூறுவதுடன் வீடியோ முடிகிறது. இறுதியில் 19 நட்சத்திரங்கள் இந்த உலக கோப்பையில் வர்ணனை செய்ய உள்ளதாக ஐசிசி வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் மனம் கவர்ந்து வைரலாகி வருகிறது.

Advertisement