அது வேற வாயா? இல்ல அட்மின் போட்டாரா? வைரலாகும் 2019 ட்வீட்டை கம்பீருக்கு காட்டி ரசிகர்கள் கேள்வி

Gautam Gambhir 8
- Advertisement -

ஜாம்பவான் ராகுல் டிராவிட்டுக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து விரைவில் துவங்கும் இலங்கை தொடரிலிருந்து அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட உள்ளார். ஆனால் அந்த தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய டி20 அணியில் அபிஷேக் ஷர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் கழற்றி விடப்பட்டுள்ளனர்.

மறுபுறம் ஜிம்பாப்வே தொடரில் சொதப்பிய ரியான் பராக் இலங்கை டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் அதே தொடரில் அசத்திய ருதுராஜ் மற்றும் அபிஷேக் சர்மா கழற்றி விடப்பட்டுள்ளனர். அதை விட ஜிம்பாப்பே டி20 தொடரில் சுப்மன் கில் சுயநலமாக செயல்பட்டதாக ரசிகர்கள் ஆதாரத்துடன் விமர்சித்தனர்.

- Advertisement -

அட்மின் போட்டாரா:
ஆனால் அப்படிப்பட்ட அவர் இலங்கை தொடரில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவை அனைத்தையும் விட சஞ்சு சாம்சன் இந்தியாவுக்காக விளையாடிய தனது கடைசி போட்டியில் தென்னாப்பிரிக்க மண்ணில் சதமடித்து வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். ஆனால் தற்போது அவரும் இலங்கை ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை.

இருப்பினும் சஞ்சு சாம்சன், ருதுராஜ், அபிஷேக் சர்மா ஆகியோரை இதே அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு சமீபத்தில் இந்தியாவுக்காக தேர்வு செய்திருந்தது. ஆனால் தற்போது பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கௌதம் கம்பீர் தாம் விரும்பும் வீரர்களை சேர்த்துக்கொண்டு சாம்சன், ருதுராஜ் போன்ற வீரர்களை கழற்றி விட்டுள்ளார். இந்நிலையில் சஞ்சு சாம்சன் பற்றி கௌதம் கம்பீர் ட்விட்டரில் பதிவிட்ட பழைய பதிவுகளை தோண்டி எடுத்து ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

அதாவது 2019ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி இரவு 9.33 மணிக்கு கம்பீர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “பொதுவாக கிரிக்கெட்டில் தனி நபர்களைப் பற்றி பேசுவதை நான் விரும்ப மாட்டேன். ஆனால் சஞ்சு சாம்சனின் திறமையை பார்த்த பின் அவர் தான் இந்தியாவில் தற்போது சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்று சொல்வேன். எனவே உலகக் கோப்பையில் அவர் தான் 4வது இடத்தில் விளையாட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பாண்டியாவுக்கு வந்தா தக்காளி சட்னியா? கோலி, தோனியை விமர்சித்த கம்பீரின் 2022 பேட்டியை விளாசும் ரசிகர்கள்

அதே போல 22/09/2020 இரவு 8.24 மணிக்கு அன்று கம்பீர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “சாம்சன் இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மட்டுமல்ல. இந்தியாவிலேயே சிறந்த இளம் பேட்ஸ்மேன். இது பற்றி யாராவது விவாதிக்க வருகிறீர்களா?” என்று பதிவிட்டுள்ளார். அத்துடன் “இந்தியாவை தவிர்த்து உலகின் மற்ற அனைத்து அணிகளிலும் சாம்சனுக்கு இடம் கிடைக்கும்” என்று 22/09/2020 இரவு 9.17 மணிக்கு மற்றொரு பதிவையும் கம்பீர் பதிவிட்டுள்ளார். இதையெல்லாம் தற்போது அவரிடமே காட்டும் ரசிகர்கள் அது வேற வாய் இது நாற வாயா? அல்லது உங்களுக்கு தெரியாமல் அட்மின் போட்டு விட்டாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement