இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கௌதம் கம்பீர் இப்போதே சில அதிரடியான வேலைகளை செய்துள்ளார். முதலில் 2022க்குப்பின் ரோஹித் சர்மா ஓய்வெடுத்த பெரும்பாலான தொடர்களில் ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டார். மேலும் 2024 டி20 உலகக் கோப்பையிலும் துணை கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.
அதனால் ஐபிஎல் மும்பை அணியை போலவே ரோஹித் சர்மா ஓய்வுக்குப் பின் ஹர்திக் பாண்டியா இந்தியாவின் டி20 கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவை நியமிக்க வைத்துள்ளார். அதை விட ஹர்திக் பாண்டியாவின் துணை கேப்டன்ஷிப் பதவியையும் பறித்துள்ள அவர் சுப்மன் கில்லை புதிய துணை கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளார்.
தக்காளி சட்னியா:
இங்கே அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு தான் சூரியகுமாரையும் சுப்மன் கில்லையும் தேர்ந்தெடுத்திருக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. ஏனெனில் இதே தேர்வுக்குழு தான் 2024 டி20 உலகக் கோப்பை உட்பட சமீப காலங்களில் ஹர்திக் பாண்டியாவை துணை கேப்டனாக தேர்வு செய்திருந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடந்த 2008 சிபி முத்தரப்பு தொடருக்குப் பின் எம்எஸ் தோனி தம்முடைய துணை கேப்டன்ஷிப் பதவியை பறித்ததை பற்றி 2022 காலகட்டத்தில் கௌதம் கம்பீர் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அந்த வீடியோவை தற்போது தோண்டி எடுத்துள்ள ரசிகர்கள் கௌதம் கம்பீர் பார்க்கும் அளவுக்கு டேக் செய்து ஷேர் செய்து வருகிறார்கள். அந்த வீடியோவில் கௌதம் கம்பீர் பேசியுள்ளது பின்வருமாறு.
“எம்எஸ் தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். நான் துணை கேப்டனாக இருந்தேன். அந்தத் தொடர் (2008 சிபி தொடர்) முடிந்ததும் நாங்கள் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள தயாராக இருந்தோம். ஆனால் வங்கதேச தொடரில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டது. அதாவது என் பெயரை நீக்கப்பட்டு விராட் கோலியின் பெயர் இந்திய அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டது”
இதையும் படிங்க: எப்போ ரிட்டையர் ஆவிங்கன்னு கேட்டேன்.. அதுக்கு தோனி சொன்ன பதில் எல்லாருக்கும் பொருந்தும்.. ஷமி பேட்டி
“விளையாட்டின் வரலாற்றில் கேப்டன் மட்டும் தன்னுடைய பதவியை வைத்துக்கொண்டு துணை கேப்டனை நீக்கியது அப்போது தான் நடந்தது” என்று பகிரங்கமாக பேசினார். அதை பார்க்கும் ரசிகர்கள் அன்று தோனி தவறு செய்ததாகவே வைத்துக் கொள்வோம். இன்று நீங்கள் ஏன் அதே தவறை செய்துள்ளீர்கள்? என்று கம்பீரிடம் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் “உங்களுக்கு வந்தால் ரத்தம் ஹர்திக் பாண்டியாவுக்கு வந்தால் தக்காளி சட்னியா?” என்றும் சமூக வலதளங்களில் கம்பீரை டேக் செய்து ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.



