IND vs AUS : எல்லா புகழும் வெங்கியை சேரும், ஆகாஷ் சோப்ராவை கலாய்த்து வரும் ரசிகர்கள் – காரணம் இதோ

Venkatesh prasad Aakash Chopra
- Advertisement -

2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா விளையாடி வருகிறது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கவாஜா 180 ரன்களும் கேமரூன் கிரீன் 114 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகள் சாய்த்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ரோஹித் சர்மா 35, சுப்மன் கில் 128, புஜாரா 42 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நல்ல ரன்களை எடுத்தனர்.

அவர்களுடன் விராட் கோலி 59* ரன்களும் ரவீந்திர ஜடேஜா 16* ரன்களும் எடுத்துள்ள நிலையில் 3வது நாள் முடிவில் 289/3 ரன்கள் குவித்துள்ள இந்தியா இன்னும் 191 ரன்கள் பின்தங்கியுள்ளது. முன்னதாக கேஎல் ராகுல் கடந்த ஒரு வருடமாக சந்தித்த விமர்சனங்களையும் தாண்டி துணை கேப்டன் என்பதற்காக இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் வாய்ப்புகள் பெற்றார். ஆனால் சமீப காலங்களாகவே அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்டு வரும் அவர் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்ததைப் போல 2022 ஜனவரிக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சதமடிக்காமல் தடுமாறி வருகிறார்.

- Advertisement -

எல்லா புகழும் அவருக்கே:
அந்த நிலையில் 8 வருடங்களாக விளையாடி 40க்கும் குறைவான பேட்டிங் சராசரி வைத்திருந்தும் தொடர்ந்து வாய்ப்பு பெறும் நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று கேஎல் ராகுலை ஆதார புள்ளி விவரங்களுடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் சரமாரியாக விமர்சித்தார். மேலும் உங்களால் கில், சர்பராஸ் கான் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் விளாசிய அவர் உண்மையான புள்ளிவிவரங்களுடன் ட்விட்டரில் அனல் தெறிக்கும் விமர்சனத்தை வைத்தார்.

அந்த விமர்சனங்களில் நியாயம் இருந்ததால் அனைவரும் அமைதியாக இருந்த நிலையில் வேண்டுமென்றே உள்ளே புகுந்த முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேஎல் ராகுல் மீதிருக்கும் வெறுப்பால் விமர்சிக்காதீர்கள் என்று யூடியூப் பக்கத்தில் 12 நிமிட வீடியோ போட்டு பதிலடி கொடுத்தார். ஆனால் 2012இல் ரோகித் சர்மாவை கலாய்த்து விமர்சித்த உங்களைப்போல் நான் யாரையும் சொந்த வெறுப்புக்காக விமர்சிக்கவில்லை என்று 10 வருட பழைய ட்வீட்டை தோண்டி எடுத்த வெங்கடேஷ் பிரசாத் அவருக்கு மீண்டும் பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

அதனால் பெட்டி பாம்பாக அடங்கிய ஆகாஷ் சோப்ரா தன்னுடைய வார்த்தைகள் தவறாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதாகவும் இது பற்றி இருவரும் நேரலையில் விவாதிக்கலாம் என்றும் அழைப்பு விடுத்தார். இருப்பினும் அதற்கு மறுப்பு தெரிவித்த வெங்கடேஷ் பிரசாத் தொடர்ந்து ராகுல் மீது நியாயமான விமர்சனங்கள் வைத்தார். அப்படி ஒரு வாரத்திற்கு மேலாக ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்கும் வகையில் ஆதாரங்களுடன் பேசிய அவரது விமர்சனங்களுக்கு தாக்கிப் பிடிக்க முடியாத பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகம் ஒரு வழியாக 3வது போட்டியில் ராகுலை நீக்கி சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுத்தது.

அந்த போட்டியில் தாறுமாறாக சுழன்ற பிட்ச்சில் 21, 5 என சொற்ப ரன்களில் அவுட்டானதால் சில விமர்சனங்கள் எழுந்தாலும் 4வது போட்டியில் சதமடித்து 128 ரன்கள் குவித்துள்ள சுப்மன் கில் ஒருநாள், டெஸ்ட், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் ஒரே காலண்டர் வருடத்தில் சதமடித்த முதல் இந்திய தொடக்க வீரராக அபார சாதனை படைத்த தனது தேர்வை சரி என்று நிரூபித்துள்ளார்.

- Advertisement -

2018 அண்டர்-19 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் தொடர் நாயகன் விருது வென்று 2021 காபா வெற்றியில் 91 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய அவர் கடந்த ஒரு வருடமாகவே சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி உச்சகட்ட பார்மில் இருக்கிறார். அதனால் சச்சின், விராட் கோலி வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக கருதப்படும் அவர் என்னதான் உச்சகட்ட பார்மில் இருந்தாலும் இப்போட்டியில் தேர்வாகி சதமடித்த அனைத்து புகழும் வெங்கடேஷ் பிரசாத்தை சேரும் என்று பாராட்டும் ரசிகர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆகாஷ் சோப்ராவை கலாய்த்து வருகிறார்கள்.

இதையும் படிங்க:வீடியோ : ஸ்டம்ப்பில் பந்து பட்டும் அவுட்டிலிருந்து சுப்மன் கில்லை காப்பாற்றிய 3 மீட்டர் – ரூல், ரசிகர்கள் அறியாத விவரம் இதோ

சிலர் பிளாட்டான பிட்ச்சில் தானே அடித்தார் என்று குறை சொல்கிறார்கள். ஆனால் அதே பிட்ச்சில் ஓரளவு நல்ல ஃபார்மில் இருக்கும் ரோகித் சர்மா புஜாரா ஆகியோர் சதமடிக்காத நிலையில் மோசமான ஃபார்மில் இருக்கும் ராகுல் நிச்சயமாக அசத்தியிருக்க முடியாது என்று சொல்லலாம்.

Advertisement