வித்யாசமான பேட்டிங், 15 வருடங்கள் – விராட், ரோஹித்தை மிஞ்சிய நம்ம அஷ்வின் ! குவிந்த பாராட்டு

Ravichandran Ashwin RR .jpeg
Advertisement

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்று போட்டிகள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 11-ஆம் தேதி நடைபெற்ற 58-ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அனிகள் சந்தித்தன. நவி மும்பையில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் 160/6 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 7 (11) ரன்களிலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 (19) ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றினார்கள்.

Ravichandran Ashwin RR 50

இருப்பினும் எதிர்பாராத வகையில் 3-வது இடத்தில் களமிறங்கி அசத்திய தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 50 (38) ரன்கள் எடுத்து காப்பாற்றினார். அவருடன் தேவ்தூத் படிக்கள் அதிரடியாக 6 பவுண்டரி 2 சிக்சருடன் 48 (30) ரன்கள் எடுத்தார். டெல்லி சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக சேட்டன் சக்காரியா, அன்றிச் நோர்ட்ஜெ, மிட்சேல் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

ராஜஸ்தான் தோல்வி:
அதை தொடர்ந்து 161 என்ற இலக்கை துரத்திய டெல்லிக்கு முதல் ஓவரிலேயே தொடக்க வீரர் கேஎஸ் பரத் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தாலும் அடுத்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ் மற்றொரு தொடக்க வீரர் டேவிட் வார்னருடன் இணைந்து அதிரடியாக தனது அணியை மீட்டெடுத்தார். ஆரம்பத்தில் நிதானத்தை காட்டிய ஆஸ்திரேலியாவை சேர்ந்த இந்த ஜோடி நேரம் செல்லசெல்ல ராஜஸ்தான் பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு 2-வது விக்கெட்டுக்கு 144 ரன்கள் சூப்பர் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்தது.

David Warner Mitchell Marsh

இதில் 5 பவுண்டரி 7 சிக்சருடன் 89 (62) ரன்கள் எடுத்த மார்ச் கடைசி நேரத்தில் சதத்தை நழுவ விட்டு அவுட்டானாலும் மறுபுறம் 5 பவுண்டரி 1 சிக்சருடன் டேவிட் வார்னர் 52* (41) ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இறுதியில் கேப்டன் ரிஷப் பண்ட் 13* (4) ரன்கள் எடுத்து பினிஷிங் கொடுத்ததால் 18.1 ஓவர்களில் 161/2 ரன்களை எடுத்த டெல்லி அதிரடியாக 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் பங்கேற்ற 12 போட்டிகளில் 6-வது வெற்றியை பதிவு செய்த அந்த அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கிறது.

- Advertisement -

அசத்தல் அஷ்வின்:
மறுபுறம் பங்கேற்ற 12 போட்டிகளில் 5-வது தோல்வியை பதிவு செய்த ராஜஸ்தான் எஞ்சிய 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. முன்னதாக இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தானுக்கு 3 சதங்களை அடித்து நல்ல பார்மில் இருக்கும் ஜோஸ் பட்லர் 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய போது 3-வது இடத்தில் தமிழக வீரர் அஸ்வின் களமிறங்கினார். இந்த வருடம் இதற்கு முந்தைய ஒருசில போட்டிகளிலும் 3-வது இடத்தில் கணிசமான ரன்கள் எடுத்த அவர் இன்று சீக்கிரத்திலேயே அவுட்டாகி விடுவார் என எதிர்பார்த்த டெல்லிக்கு அற்புதமாக பேட்டிங் செய்த அவர் கடும் சவாலை கொடுத்தார்.

- Advertisement -

உள்ளூர் போட்டிகளில் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய திறமையை இந்த போட்டியில் வெளிப்படுத்திய அவர் 4-வது ஓவரிலிருந்து 14-வது ஓவர்கள் வரை அட்டகாசமான பவுண்டரிகளை பறக்க விட்டு டெல்லிக்கு தொல்லை கொடுத்தார். குறிப்பாக சுழல் பந்துகளை திறம்பட எதிர்கொள்வதற்காக ஸ்டம்ப்பை துளியளவு கூட பவுலர்களுக்கு காண்பிக்காதவாறு கிட்டத்தட்ட அமர்ந்தவாறு ஸ்பெஷஸ் “பேட்டிங் ஸ்டேன்ஸ்” யுக்தியை அவர் கையாண்டது ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் வியப்பில் ஆழ்த்தி கலகலப்புடன் பாராட்ட வைத்தது.

15 வருட தவம்:
மொத்தத்தில் அற்புதமாக பேட்டிங் செய்த அவர் ஐபிஎல் மற்றும் டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக தனது அரைசதத்தை பதிவு செய்த காரணத்தால் சதத்தை அடித்ததற்கு ஈடாக கொண்டாடும் வகையில் ஹெல்மெட்டை கழற்றி பேட்டை உயர்த்தியதும் ரசிகர்களும் வர்ணனையாளர்களும் மனதாக அவரைப் பாராட்டினார்கள். கடந்த 2008இல் முதல் முறையாக ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமாகி அதன்பின் இந்தியாவுக்காகவும் விளையாடி வரும் அவர் பந்துவீச்சில் பல சாதனைகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 சதங்கள் அடித்த போதிலும் டி20 கிரிக்கெட்டில் அரைசதம் அடிக்க முடியாமல் இருந்தார். ஒருவழியாக தவத்தை போல 15 வருடத்திற்கு பின் நேற்று முதல் முறையாக டி20 கிரிக்கெட்டில் அரை சதம் அடித்து அசத்தினார். அவரின் அதிகபட்ச டி20 ஸ்கோர்கள் இதோ:
1. 50 – டெல்லிக்கு எதிராக, 2022*
2. 45 – ராஜஸ்தானுக்கு எதிராக, 2018

- Advertisement -

மேலும் இந்த வருடம் இதுவரை 133 ரன்களை 22.17 என்ற சராசரியில் 144 என்ற ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் எடுத்துள்ள அவர் 9 விக்கெட்டுகளை எடுத்து ஆல்-ரவுண்டராக அசத்தி வருகிறார். அவரின் இந்த பேட்டிங் சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் என்பது இந்திய நட்சத்திரங்கள் ரோகித் சர்மா (18.18/125.00) மற்றும் விராட் கோலியை (19.64/111.34) விட அதிகமாகும்.

Advertisement