அவமானம், நிராகரிப்பு ! அத்தனைக்கும் ஹைதெராபாத்தை பழிக்கு பழி தீர்த்த வார்னர் – ரசிகர்கள் கொண்டாட்டம்

David Warner vs SRH 2
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் மே 5-ஆம் தேதி நடைபெற்ற 50-ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்கேற்றன. அந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லிக்கு தொடக்க வீரர் மந்தீப் சிங் டக் அவுட்டாக அடுத்த வந்த மிட்சேல் மார்ஷ் 10 (7) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 37/2 என ஆரம்பத்திலேயே தடுமாற்றமான தொடக்கத்தை அந்த அணி பெற்றது.

David Warner Rovman Powell

- Advertisement -

அந்த சரிவை சரிசெய்ய அதிரடியை கையாண்ட கேப்டன் ரிஷப் பண்ட் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 26 (16) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். ஆனால் மறுபுறம் மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கி ஹைதராபாத் பவுலர்களை விளாசிக் கொண்டிருந்த டேவிட் வார்னருடன் அடுத்ததாக களமிறங்கி கைகோர்த்த வெஸ்ட் இண்டீஸ் இளம் வீரர் ரோவ்மன் போவல் அதிரடியாக பவுண்டரிகளை பறக்கவிட்டார்.

டெல்லி அசத்தல்:
இதில் 12 பவுண்டரி 3 சிக்சருடன் டேவிட் வார்னர் 92* (58) ரன்கள் எடுக்க மறுபுறம் கடைசி நேரத்தில் ரன் மழை பொழிந்த ரோவ்மன் போவல் 3 பவுண்டரி 6 சிக்சருடன் 67* (35) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் டெல்லி 207/3 ரன்களை எடுத்தது. அதைத்தொடர்ந்து 208 என்ற கடினமான இலக்கை துரத்திய ஹைதராபாத்துக்கு அபிஷேக் சர்மா 7 (6) கேன் வில்லியம்சன் 4 (11) ராகுல் திரிப்பாதி 22 (28) ஆகிய டாப் ஆர்டர் வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 37/3 என ஆரம்பத்திலேயே அந்த அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியானது. அந்த சூழ்நிலையில் ஐடன் மார்க்ரமுடன் ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் பூரன் 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு முயற்சித்தார்.

DC vs SRH Kane Williamson

நாயகன் டேவிட் வார்னர்:
ஆனால் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 42 (25) ரன்கள் எடுத்திருந்தபோது ஐடன் மார்க்ரம் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஷஷாங்க் சிங் 10 (6) சீன் அபோட் 7 (5) போன்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டானதால் தோல்வி உறுதியானது. இறுதியில் தனி ஒருவனை போல 2 பவுண்டரி 6 சிக்சர்கள் பறக்கவிட்ட நிக்கோலஸ் பூரன் 62 (34) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க 20 ஓவர்களில் 186/8 ரன்கள் மட்டுமே எடுத்த ஹைதராபாத் பரிதாபமாக தோற்றது. டெல்லி சார்பில் அதிகபட்சமாக கலீல் அஹமத் 3 விக்கெட்டுகள் எடுத்தார். இதனால் 10 போட்டிகளில் 5-வது தோல்வியை பதிவு செய்த ஹைதராபாத் புள்ளி பட்டியலில் 6-வது இடத்திற்கு பின்தங்கினாலும் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.

- Advertisement -

மறுபுறம் பேட்டிங்கில் மிரட்டி பந்துவீச்சில் அசத்திய டெல்லி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 10 போட்டிகளில் 5-வது வெற்றியை பதிவு செய்து 5-வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த சிறப்பான வெற்றிக்கு 92 ரன்கள் விளாசி முக்கிய பங்காற்றிய டேவிட் வார்னர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாட வைத்துள்ளது.

1. ஏனெனில் 2014 முதல் ஹைதராபாத் அணிக்காக 528, 562, 848, 641, 692, 548 என ஒவ்வொரு வருடமும் குறைந்தது 500க்கும் மேற்பட்ட ரன்களை விளாசி மொத்தமாக 95 போட்டிகளில் 4014 ரன்களை 49.55 என்ற அபாரமான சராசரியில் 142.59 என்ற அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்த அவர் ஐபிஎல் வரலாற்றில் ஹைதராபாத் அணிக்கான அதிக ரன்கள், அதிக சதங்கள், அதிக அரை சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் போன்ற பல சாதனைகளைப் படைத்தார்.

- Advertisement -

2. மேலும் 2015, 2017, 2019 ஆகிய வருடங்களில் ஆரஞ்சு தொப்பியை வென்ற அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக ஆரஞ்சு தொப்பியை வென்ற வீரர் என்ற சாதனையையும் படைத்தார். அதைவிட 2016இல் கேப்டனாக சாம்பியன் பட்டத்தையும் பெற்றுக் கொடுத்த அவர் இடையிடையே சமூக வலைதளங்களில் “புட்ட பொம்ம” பாடலுக்கு நடனமாடி ஹைதராபாத் ரசிகர்களை மகிழ்வித்து அந்த மாநிலத்தின் ஒரு அங்கமாகவே மாறினார்.

அவமானம், நிராகரிப்பு:
ஆனால் அப்படிப்பட்ட அவரை 2021இல் முதல் முறையாக ரன்கள் அடிக்க தடுமாறினார் என்ற காரணத்திற்காக கேப்டன் பதவியிலிருந்து நீக்கிய ஹைதெராபாத் அணி நிர்வாகம் அதன்பின் விளையாடும் 11 பேர் கொண்ட அணியிலும் கழற்றிவிட்டது. மேலும் அவரை போய் கூல்ட்ரிங்ஸ் தூக்கவைத்து பெஞ்சில் அமர வைத்து படுத்திய கொடுமைகளை பார்த்த ரசிகர்கள் கண் கலங்கினார்கள்.

இருப்பினும் அத்தனையையும் பொறுத்துக் கொண்டு சிரித்த முகத்துடன் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்த அவரை இறுதியில் அணியிலிருந்தே மொத்தமாக வெளியேற்றியது. அப்படி “முடிந்து போய்விட்டார்” என முத்திரை குத்தப்பட்ட வார்னர் அதற்கெல்லாம் அசராமல் துபாயில் நடந்த 2021 டி20 உலக கோப்பையில் அபாரமாக செயல்பட்டு ஆஸ்திரேலியா முதல் முறையாக டி20 உலககோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி தொடர் நாயகன் விருதை வென்று பார்முக்கு திரும்பினார்.

அந்த நிலையில் அவரை 6.5 கோடி என்ற நல்ல தொகைக்கு வாங்கிய டெல்லி தொடர்ந்து வாய்ப்பளித்து வந்த நிலையில் நேற்று தனது முன்னாள் அணியான ஹைதராபாத்துக்கு எதிராக முதல் போட்டியிலேயே அட்டகாசமாக விளையாடி ஆட்டநாயகன் விருதை வென்ற வார்னர் அந்த அணியை பழிதீர்த்து விட்டார் என்று ரசிகர்கள் பெருமையுடன் கொண்டாடுகின்றனர்.

Advertisement