வீடியோ : டெல்லி கோட்டையில் நவீனுக்கு மாஸ் காட்டிய கிங் கோலி ரசிகர்கள்.. ஆப்கன் 224/4 டூ 272/8.. இந்தியா க்ளாஸ் பவுலிங்

- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கட் தொடரில் அக்டோபர் 11ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 9வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு பும்ரா வேகத்தில் ஆரம்பத்திலேயே இப்ராஹிம் ஜாட்ரான் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் தடுமாறிய ரஹ்மத்துல்லா குர்பாஸ் 21 ரன்களில் பாண்டியா வேகத்தில் அவுட்டாக 3வது களமிறங்கி நிதானமாக விளையாட முயற்சித்த ராகில் ஷா 16 ரன்களில் அவுட்டானார். அதனால் 63/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய ஆப்கானிஸ்தான் அணிக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாகிதி மற்றும் ஓமர்சாய் ஆகியோர் நிதானமாக விளையாடி சரிவை சரி செய்ய முயற்சித்தனர்.

- Advertisement -

அந்த வகையில் மிடில் ஓவர்களில் நங்கூரமாக நின்று 35 ஓவர்கள் வரை சிறப்பாக பேட்டிங் செய்த இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆப்கானிஸ்தானை மீட்டெடுத்த போது ஓமர்சாய் 2 பவுண்டரை 4 சிக்சருடன் 62 ரன்களில் பாண்டியா வேகத்தில் ஆட்டமிழந்தார். ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக பேட்டிங் செய்த கேப்டன் ஷாகிதி 43 ஓவர்கள் வரை சிறப்பாக விளையாடி 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் 80 (88) ரன்கள் எடுத்திருந்த போது சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குல்தீப் யாதவ் சுழலில் சிக்கினார்.

ஆனால் அடுத்ததாக வந்த நஜிபுல்லா ஜாட்ரான் 2 ரன்களில் அவுட்டாக்கிய பும்ரா மறுபுறம் ஃபினிஷிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட முகமது நபியையும் 19 ரன்களில் அவுட்டாக்கினார். அத்துடன் கடைசி நேரத்தில் கண்மூடித்தனமாக அடிக்கக்கூடிய ரசித் கானையும் 16 ரன்களில் அவுட்டாக்கி பெவிலியன் அனுப்பி வைத்த அவர் 2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை எடுத்து ஆப்கானிஸ்தானை அதிரடியாக விளையாட விடாமல் தடுத்து நிறுத்தினார்.

- Advertisement -

அப்போது பேட்டிங் செய்வதற்காக நவீன்-உல்-ஹக் வந்த போது டெல்லி ரசிகர்கள் மொத்தமாக சேர்ந்து கோலி கோலி என்று கூச்சலிட்டு மொத்த மைதானத்தையும் தெறிக்க விட்டார்கள் என்றே சொல்லலாம். அதாவது கடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடிய அவர் இந்தியாவின் ஜாம்பவானாக போற்றப்படும் விராட் கோலியிடம் சண்டையில் ஈடுபட்டு இன்ஸ்டாகிராமில் கலாய்த்தது யாராலும் மறக்க முடியாது.

அதற்கு ஏற்கனவே ரசிகர்கள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் நிலையில் விராட் கோலியின் சொந்த ஊரான டெல்லி கோட்டையில் தற்போது மற்றுமொரு பதிலடி கொடுத்து மாஸ் காட்டினர். இறுதியில் நவீன் 9* ரன்களும் முஜீப் 10* ரன்களும் எடுத்த போதிலும் 50 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 272/8 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்களை சாய்த்தார். குறிப்பாக 224/4 என்ற நல்ல நிலையில் இருந்த அந்த அணியை 300 ரன்கள் தொடவிடாத அளவுக்கு இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

Advertisement