2023 உ.கோ ஃபைனலுக்காக பழி வாங்கிய ஜெய் ஷா? ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டதால் ரசிகர்கள் சந்தேகம்

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்காக 2023 – 24 காலண்டர் வருடத்தில் விளையாடப் போகும் வீரர்களுக்கான மத்திய சம்பள ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்திலிருந்து இசான் கிசான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய 2 வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த 2 வீரர்களையும் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் அறிவுறுத்தியிருந்தனர்.

இருப்பினும் அவர்களின் பேச்சைக் கேட்டு ரஞ்சிக் கோப்பையில் விளையாடாததால் தற்போது இவர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள் என்று நம்பப்படுகிறது. இதில் இஷான் கிசான் சமீப காலமாகவே தடுமாற்றமாக செயல்பட்டு வருவதுடன் ஐபிஎல் 2024 தொடரில் விளையாடுவதற்கு தயாராவதால் பிசிசிஐ சம்பள பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

உண்மையான பின்னணி:
ஆனால் சமீப காலங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த 2023 உலகக் கோப்பையில் 530 ரன்கள் அடித்து சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக செயல்பட்டார். குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிரான செமி ஃபைனலில் 70 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்த அவர் இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

அப்படி இருந்தும் அவரை பிசிசிஐ அதிரடியாக நீக்கியுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்தப் பின் பெவிலியனில் மனமுடைந்திருந்த இந்திய வீரர்களை பார்க்க பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார். அப்போது அனைத்து வீரர்களையும் வரிசையாக பார்த்த அவர் கை கொடுத்து தோல்வியை சந்தித்தாலும் சிறப்பாக விளையாடியதாக பாராட்டும் ஆறுதலும் தெரிவித்தார்.

- Advertisement -

இதையும் படிங்க: ஊதிய ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷனுக்கு ஆதரவாக – ரவி சாஸ்திரி வெளியிட்ட பதிவு

அந்த நேரத்தில் தம்முடைய அருகில் நரேந்திர மோடி வந்த போது அவரிடம் கை கொடுக்காத ஸ்ரேயாஸ் ஐயர் சற்று திமிராக திரும்பிக் கொண்டு தனது கைகளை இடுப்பின் மீது பாட்ஷா திரைப்படத்தில் வரும் ரஜினியை போல வைத்துக்கொண்டு நின்றார். இருப்பினும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத மோடி அருகில் இருந்த வீரர்களிடம் கை கொடுத்து விட்டு சென்றார். ஆனால் அப்படி பிரதமருக்கு மரியாதை கொடுக்காமல் திமிராக நின்றதாலேயே ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் சந்தேகப்படுகின்றனர்.

குறிப்பாக மோடி தலைமையிலான அரசில் மத்திய அமைச்சராக இருக்கும் அமித் ஷா மகன் ஜெய் ஷா பிசிசிஐ செயலாளராக இருக்கிறார். எனவே மோடியை மதிக்காத காரணத்தால் சரியான நேரம் பார்த்து ரஞ்சிக் கோப்பையில் விளையாடவில்லை என்பதை காரணமாக வைத்து ஸ்ரேயாஸ் ஐயரை அவர் பழிவாங்கியுள்ளதாக வீடியோவுடன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement