ஒரே பந்துக்கு 3 முறை 3 வது அம்பயரிடம் சென்ற வீரர்கள். அம்பயர் செய்த குழப்பம் – நேற்றைய போட்டியில் இதை கவனித்தீர்களா ?

நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிக் கொண்டனர். முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி தீபக் சஹரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதன் காரணமாக சிறப்பான தொடக்கத்தை பஞ்சாப் அணியால் கொடுக்க முடியவில்லை. கே எல் ராகுல், மயங்க் அகர்வால், கிறிஸ் கெயில் மற்றும் நிக்கோலஸ் பூரன் என அடுத்தடுத்து எல்லோரும் அவுட்டாகி செல்ல, தமிழக வீரர் ஷாருக்கான் மட்டும் நின்று பொறுப்பாக விளையாடி 47 ரன்கள் குவித்து கொடுத்தார். அதன் காரணமாக இறுதியாக பஞ்சாப் அணியால் 20 ஓவரில் 106 ரன்கள் அடிக்க முடிந்தது.

faf

அதன் பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் ஏமாற்றம் அளிக்க, ஆனால் டுப்லஸ்ஸிஸ் மற்றும் மொயின் அலி ஜோடி போட்டுக் கொண்டு சென்னை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். சென்னை அணி இலக்கை சேஸ் செய்த வேளையில், 14-வது ஓவரை ரைலே மெரிடித் வீசினார். அவர் வீசிய பந்து டுப்லஸ்ஸிஸ் கிளவுஸை தொட்டுச் சென்றது என உணர்ந்த கள நடுவர் அனில் சவுத்ரி அந்த பந்து ஷார்ட் பாலா என மூன்றாவது நடுவரிடம் விசாரித்தார்.

ஏனெனில் அந்த ஓவரில் மெரிடித் ஏற்கனவே ஒரு ஷார்ட் பாலை வீசினார். எனவே அது மீண்டும் ஷார்ட் பாலாக இருந்தால், அது விக்கெட் கணக்கில் சேராது நோபால் கணக்கில் சேரும். எனவே அந்த பந்தை மூன்றாவது நடுவர் திரும்ப பார்க்கையில், அந்த பந்து தோள்பட்டைக்கு கீழ் தான் சென்றது. எனவே அது ஷார்ட் பால் இல்லை என முடிவு செய்துவிட்டு, பந்து கிளவுஸில் பட்டதா இல்லையா என பார்க்காமல் அவுட் கொடுத்து விடும்படி அனில் சவுத்ரி இடம் கூறியுள்ளார்.

faf 1

இதை சரியாக புரிந்து கொள்ளாத அனில் சவுத்ரி நாட் அவுட் என அறிவித்தார். பின்னர் மீண்டும் மூன்றாவது நடுவர் அவுட் என கூற அணில் சவுத்ரியும் முடிவை மாற்றி அவுட் என அறிவித்தார். ஆனால் பந்து தன்னுடைய கிளவுஸ்ஸில் சுத்தமாக படவில்லை என நம்பிய டுப்லஸ்ஸிஸ், டி ஆர் எஸ் ரிவியூ எடுத்தார். பின்னர் மீண்டும் மூன்றாவது நடுவர் சரியாக பார்க்கையில் அந்த பந்து டு பிளெஸ்ஸிஸ் கிளவுஸ்ஸில் படவில்லை என தெரியவந்தது.

- Advertisement -

faf2

எனவே மீண்டும் 3வது அம்பயர் நாட் அவுட் என அறிவிக்கும் படி அணில் சவுத்ரி இடம் கூற, கடைசியில் ஒரு வழியாக அனில் சவுத்திரியும் நாட் அவுட் என அறிவித்தார். இதனால் ஆட்டத்தில் சில நிமிடங்கள் குழப்பம் ஏற்பட்டது. அதன் பின்னரே மீண்டும் ஆட்டம் தொடங்கப்பட்டது. இவ்வாறு நடந்தது மிக மிக வேடிக்கையாக உள்ளது என கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.