பவுண்டரி லைனில் சூப்பர் மேனாக மாறி அசத்தலான 2 கேட்ச்களை பிடித்த டூப்ளெஸ்ஸிஸ் – வைரலாகும் வீடியோ

faf
- Advertisement -

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடப்பு ஆண்டின் முதல் ஐபிஎல் போட்டி நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் இடையே நடந்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பலம் வாய்ந்த மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று தொடரை சிறப்பாக ஆரம்பித்துள்ளது.

Rayudu

- Advertisement -

பொதுவாகவே சென்னை வயதானவர்களை கொண்ட அணி என்று விமர்சிக்கப்படுகிறது. அதற்கு காரணம் யாதெனில் சென்னை அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் 30 வயதை கடந்தவர்கள் இருப்பினும் சென்னை அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தையே கொடுத்து வருகிறது .ஆனாலும் நேற்றைய போட்டியில் சில பீல்டிங் குறைபாடுகளை நாம் பார்க்க முடிந்தது. அதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.

ஏனெனில் நிறைய வீரர்கள் பீல்டிங்கின் போது பல தவறுகளை செய்தனர் அதனால் சில ரன்களும் மும்பை அணிக்கு எளிதாக கிடைத்தது. ஆனால் கேட்சிங் பொறுத்தவரை சென்னை அணியின் முன்னணி வீரரான டுபிளிசிஸ் அபாரமாக செயல்பட்டார். கிரிக்கெட் உலகில் பிட்டான வீரர்களில் ஒருவரான டு பிளேசிஸ் எப்பொழுதும் களத்தில் தனது 100 சதவீத உழைப்பை வருடாவருடம் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் நேற்று நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் தனது பங்கிற்கு அபாரமான மூன்று கேட்சிகளை பிடித்தார். அதிலும் சவுரப் திவாரி மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோரது கேட்சிகளை பவுண்டரி லைனில் எகிறி அட்டகாசமாக பிடித்து அசத்தினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வழக்கம் போல அவர் தனது சிறப்பான செயல்பாட்டை பீல்டிங் மற்றும் பேட்டிங்கில் (58 ரன்கள்) நேற்றைய போட்டியில் காண்பித்தார். ரசிகர்களின் மத்தியில் அவரது இந்த உழைப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement