சி.எஸ்.கே அணிக்கு கிடைத்த விராட் கோலி தான் இவர். இளம்வீரரை புகழ்ந்த – டூபிளெஸ்ஸிஸ்

faf
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 53 வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

Dhoni

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக இளம் வீரர் தீபக் ஹூடா 30 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகள் என 62 ரன்களையும், கேஎல் ராகுல் 29 ரன்களும் குவித்தனர். சென்னை அணி சார்பாக லுங்கி நெகிடி சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 39 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 154 ரன்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக துவக்க வீரர் கெய்க்வாட் 49 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்சர் என 62 ரன்களையும், டு பிளிசிஸ் 34 பந்துகளில் 48 ரன்களையும், அம்பத்தி ராயுடு 30 பந்துகளில் 30 ரன்களும் குவித்தனர். ஆட்டநாயகனாக ருத்ராஜ் கெய்க்வாட் தேர்வானார்.

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய சென்னை அணியின் துவக்க வீரர் டு பிளிசிஸ் கூறுகையில் : எங்கள் அணியில் உள்ள இளம் வீரர்களில் ஒருவரான ருதுராஜ் கெய்க்வாட் விராட் கோலி போன்று பேட்டிங் விளையாடுகிறார். அவர் சி.எஸ்.கே அணியின் யங் விராட் கோலி. அவர் களம் இறங்கிய விளையாடும்போது அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்ற நோக்கத்துடனே விளையாடி வருகிறார்.

இக்கட்டான சூழ்நிலையிலும் அவரது பேட்டிங் அருமையாக உள்ளது. ஒரு இளம் வீரர் இப்படி விளையாடும் போது அதை பார்ப்பதற்கு சிறப்பாகவும் அவரது எதிர்காலம் அழகாக மாற உள்ளதையும் காட்டுகிறது. எனக்கு இன்னும் நிறைய ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட வேண்டிய ஆசை இருக்கிறது. குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாவது விளையாடுவேன் என டூபிளெஸ்ஸிஸ் தெரிவித்தார்.

Advertisement