சின்ன பையனா ஒல்லியா இருக்காரு. சிக்ஸ் அடிப்பாரான்னு நெனச்சாங்க. ஆனா பொளந்துட்டாரு – டூபிளெஸ்ஸிஸ் புகழாரம்

Faf
- Advertisement -

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற முக்கியமான 13 ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணியானது பட்லர் மற்றும் ஹெட்மையர் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 169 ரன்களை குவித்தது. அடுத்ததாக 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூர் அணி துவக்கத்திலேயே அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதனால் இந்த போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெறுவது கடினம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

RR vs RCB DK

- Advertisement -

அந்த நேரத்தில் பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் மற்றும் இளம் வீரரான சபாஷ் அகமது ஆகியோர் தங்களது சிறப்பான பாட்னர்ஷிப்பை அமைக்க பெங்களூர் அணி மின்னல் வேகத்தில் ரன் குவிக்க துவங்கியது. கிட்டத்தட்ட வெற்றி சாத்தியமே இல்லை என்று இருந்த வேளையில் அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்ட அவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றனர்.

கிட்டத்தட்ட வெற்றி உறுதி என்ற நிலையில் சபாஷ் அகமது 45 ரன்களில் வெளியேறினார். ஆனால் மறுபுறம் இருந்த தினேஷ் கார்த்திக் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 44 ரன்கள் குவித்து அணியை பிரமாதமான வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்த வெற்றி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் கூறுகையில் : இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் விளையாடிய விதம் மிக அற்புதமாக இருந்தது.

Shahbaz ahmed

இக்கட்டான வேளையில் மிகவும் அமைதியாக இருந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் எங்கள் அணிக்கு ஒரு முக்கியமான வீரர் என்றே நான் கூறுவேன். அதுமட்டுமின்றி இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம். ஆனால் இறுதி கட்டத்தில் பட்லர் சில நல்ல ஷாட்களை விளையாடி ரன் குவித்து விட்டார். இருந்த போதிலும் அந்த இலக்கினை நாங்கள் துரத்தியதில் மகிழ்ச்சி.

- Advertisement -

இந்த போட்டியில் எங்களது அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க தினேஷ் கார்த்திக் மற்றும் சபாஷ் அகமது சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்தனர். அதிலும் குறிப்பாக சபாஷ் அகமதுவை நிறைய பேர் சந்தேகப்பட்டனர். ஏனெனில் சின்னப்பையனாக ஒல்லியாக இருக்கும் அவரால் சிக்ஸ் அடிக்க முடியுமா என்றெல்லாம் நினைத்து இருப்பார்கள். ஆனால் சபாஷ் அகமது மிகப்பெரிய சிக்சர்களை இந்த போட்டியில் விளாசினார். அவருடைய அதிரடி ஆட்டம் இந்த போட்டியில் சிறப்பாக இருந்தது.

இதையும் படிங்க : இளம் வீரர்களை மிரட்டினார்! அனில் கும்ப்ளே – விராட் கோலி விரிசல் பிரச்சனையில் வெளியான புதிய தகவல்

பந்து வீச்சாளரான அவரை நாங்கள் இந்த போட்டியில் பவுலிங்கின் போது பயன்படுத்த இதற்கு காரணம் மைதானம் சற்று ஈரமாக இருந்ததால் அவரால் பந்தை கிரிப் செய்து வீசமுடியாது எனபதால்தான் அவருக்கு பந்துவீச வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால் பேட்டிங்கின் போது அவரது திறனை என்ன என்பதை காண்பித்து விட்டார் என டூபிளெஸ்ஸிஸ் புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement