இளம் வீரர்களை மிரட்டினார்! அனில் கும்ப்ளே – விராட் கோலி விரிசல் பிரச்சனையில் வெளியான புதிய தகவல்

Kumble
- Advertisement -

உலக அளவில் இன்று இந்திய கிரிக்கெட் அணி உலகத்தரம் வாய்ந்த ஒரு முக்கிய அணியாக திகழ்ந்து வருகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் வரிசையில் தரமான அணியாக விளங்கும் இந்தியாவின் வெற்றிக்கு அணியில் விளையாடும் வீரர்களின் செயல்பாடுகளையும் தாண்டி அதன் தலைமைப் பொறுப்பிலிருக்கும் கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர் ஆகியோரிடையே நல்ல உறவு தேவைப்படுகிறது. அந்த வகையில் எம்எஸ் தோனி – கேரி க்ரிஸ்டன், சௌரவ் கங்குலி – ஜான் ரைட் போன்ற அற்புதமான கேப்டன் – பயிற்சியாளர் கூட்டணியை பெற்ற இந்தியா கடந்த காலங்களில் பல வெற்றிகளை ருசித்தது.

Chappell 3

- Advertisement -

இருப்பினும் இந்த கூட்டணி எப்போதும் வெற்றிகரமாக அமைவது கிடையாது. அந்த வகையில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரேக் சேப்பல் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட விரிசல் இந்தியாவின் வெற்றியை மிகப்பெரிய அளவுக்கு பாதித்து இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய கரும்புள்ளியாக அமைந்துள்ளது.

விராட் கோலி – அனில் கும்ப்ளே விரிசல்:
அது கூட ஒரு வெளிநாட்டு பயிற்சியாளர் – இந்திய கேப்டன் என்பதால் அவர்களிடையே முரண்பாடு ஏற்பட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று கூறலாம். ஆனால் கடந்த 2017-ஆம் ஆண்டு கேப்டனாக எம்எஸ் தோனி விலகிய பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலிக்கு உறுதுணையாக இந்தியாவின் ஜம்பவன் அனில் கும்ப்ளே பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டார். ஆனால் அவர்களிடையே கருத்து வேறுபாடு இருந்த காரணத்தால் அந்த கூட்டணி ஒரு வருடம் கூட தாக்கு பிடிக்க முடியாமல் சர்ச்சையான வகையில் பிரிந்தது.

Virat-Kohli-Anil-Kumble

குறிப்பாக கடந்த 2017-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் இந்தியா பரிதாபமாக தோற்றது. அந்த அதிர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்த இந்திய ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக “கேப்டன் விராட் கோலி உடனான உறவு சரியாக அமையவில்லை” எனக்கூறிய அனில் கும்ப்ளே அதிரடியாக பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார்.

- Advertisement -

அதன்பின் விராட் கோலிக்கு பிடித்த ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு 2021 வரை இந்திய அணி உலக கோப்பையை வெல்ல விட்டாலும் நிறைய சரித்திரம் வாய்ந்த வெற்றிகளை பதிவு செய்தது. அந்த நிலைமையில் அந்த கூட்டணியும் ஓய்வு பெற்று தற்போது ரோகித் சர்மா – ராகுல் ட்ராவிட் என்ற புதிய கூட்டணி இந்திய தலைமை பொறுப்பில் அமர்ந்துள்ளது. அனில் கும்ப்ளே மற்றும் விராட் கோலி ஆகியோருக்கிடையே விரிசல் ஏற்பட்டு 5 வருடங்கள் கழிந்துள்ள நிலையில் தற்போது அது பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Vinod Rai

இது பற்றி அந்த சமயத்தில் ஐபிஎல் சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய பிசிசிஐயை நிர்மாணிக்க உச்சநீதி மன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட வினோத் ராய் தனது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். 2017 முதல் 3 வருடங்கள் பிசிசிஐ தலைமைப் பொறுப்பை கவனித்த அவர் தற்போது “பிசிசிஐயில் எனது இன்னிங்ஸ் – வெறும் நைட் வாட்ச்மேன் அல்ல” என்ற பெயரில் புத்தகம் வெளியிட்டுள்ளார். அதில் இதுபற்றி அவர் கூறியது பின்வருமாறு. “அந்த சமயத்தில் கேப்டன் மற்றும் அணி நிர்வாகத்தினரடையே நான் மேற்கொண்ட உரையாடலில் அனில் கும்ப்ளே மிக அதிக கண்டிப்புடன் நடந்து கொண்டதால் அணியில் உள்ள இதர உறுப்பினர்கள் அவர் மீது மகிழ்ச்சி இல்லாமல் அதிருப்தியாக இருந்ததை தெரிந்து கொண்டேன். அதிலும் இளம் வீரர்களுடன் இணைந்து வேலை செய்யும் போது அவர்களை மிரட்டும் வகையில் அனில் கும்ப்ளே நடந்து கொண்டதை விராட் கோலியுடன் நான் பேசியபோது தெரிந்து கொண்டேன்”

- Advertisement -

“அந்த இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து திரும்பிய பின் அனில் கும்ப்ளேவுடன் நாங்கள் நீண்ட நேரம் பேசினோம். அப்போது அந்த மோசமான தருணங்களில் அவர் மிகுந்த விரக்தியுடன் இருந்தார். மேலும் கேப்டன் அல்லது அணிக்கு இவ்வளவு முக்கியம் கொடுக்கப்பட கூடாது என கருதிய அவர் தன்னை நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதாக உணர்ந்தார். ஒரு அணியில் ஒழுக்கம் மற்றும் நல்ல நடத்தைகளை கொண்டுவருவது பயிற்சியாளர்களின் கடமையாகும். அந்த வகையில் ஒரு சீனியரான தனது கருத்துக்களை அணி வீரர்கள் மதித்திருக்க வேண்டும் என அவர் கருதினார்” என கூறினார்.

Kumble 2

இளம் வீரர்களை மிரட்டிய கும்ப்ளே:
அதாவது ஒரு பயிற்சியாளராக தங்களிடம் மிகவும் கடுமையாக மிரட்டும் வகையில் அனில் கும்ப்ளே நடந்து கொண்டதால் அவருக்கு எதிராக பேச முடியாத இளம் வீரர்கள் கேப்டன் விராட் கோலியிடம் அது பற்றி தெரிவித்துள்ளார்கள். அந்த சமயத்தில் ஒரு கேப்டனாக அணி வீரர்களை காக்கவேண்டிய விராட் கோலி கும்ப்ளேவின் கருத்துக்களை ஏற்காமல் முரண்பாடாக நடந்து கொண்டதால் இறுதியில் கும்ப்ளே பதவி விலகியது தெரியவருகிறது.

- Advertisement -

இதுபற்றி வினோத் ராய் மேலும் பேசியது பின்வருமாறு. “இந்த பிரச்சனையை இந்திய கிரிக்கெட் ஆலோசனை குழுவால் மட்டுமே தீர்க்க முடியும் என அவர்கள் நினைத்தனர். அதன் காரணமாக அவர்கள் இருவரிடமும் கிரிக்கெட் ஆலோசனை குழு தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் இறுதியில் கும்ப்ளேவை ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தப்படி அடுத்த 3 வருடங்களுக்கு பயிற்சியாளராக நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது” என கூறினார்.

இதையும் படிங்க : நான் பேட்டிங் பண்ண உள்ள போகும்போதே அந்த முடிவை எடுத்துட்டேன் – ஆட்டநாயகன் தினேஷ் கார்த்திக் அதிரடி

அவர் கூறும் கிரிக்கெட் ஆலோசனை குழுவில் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி மற்றும் விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு விராட் கோலி மற்றும் கும்ப்ளே ஆகிய இருவரிடமும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தி சுமூகம் செய்ய நினைத்ததாக வினோத் ராய் தெரிவித்துள்ளார். ஆனால் எனது ஸ்டைலில்தான் கேப்டன்ஷிப் செய்வேன் என அடம் பிடித்த விராட் கோலியிடம் உங்களுக்காக எனது பயிற்சியாளர் ஸ்டைலை மாற்றிக் கொள்ள முடியாது என கும்ப்ளே கருதியதால் கிரிக்கெட் ஆலோசனை குழுவின் பேச்சு வார்த்தையையும் தாண்டி உடனடியாக பதவி விலகியதாக வினோத் ராய் பின்னணியை தெளிவுபடுத்தியுள்ளார்.

Advertisement