இந்த ரெண்டு டீம்ல ஒரு டீம் தான் டி20 உலககோப்பையை ஜெயிக்கும் – டூப்ளெஸ்ஸிஸ் தேர்வு செய்த அந்த 2 டீம் எது தெரியுமா ?

Faf
- Advertisement -

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் வருகிற 18-ஆம் தேதி துவங்கி 22ம் தேதி முடிவடையும் நிலையில் அடுத்த ஐசிசியின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழா என்றால் அது டி20 உலகக் கோப்பை தான். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த இந்த தொடரானது கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போதும் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறையாத நிலையில் இந்தியாவில் டி20 உலக கோப்பை தொடர் நடத்துவதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

ஒருவேளை இந்தியாவில் இந்த தொடரை திட்டமிட்டபடி நடத்த முடியாத பட்சத்தில் இந்த தொடரானது யுஏஇ மற்றும் ஓமன் ஆகிய நாட்டில் நடைபெறும் வாய்ப்பு இருப்பதாக ஐசிசி தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒருவேளை இந்தியாவில் நடத்த முடியவில்லை என்றால் நிச்சயம் யுஏஇ மற்றும் ஓமன் நாட்டில் தான் இந்த ஏழாவது டி20 உலகக்கோப்பை நடைபெறும். அப்படி அந்த நாடுகளில் நடைபெறும் போது எந்த அணிக்கு சாதகமாக டி20 உலக கோப்பை தொடர் அமையும் என்பது குறித்து தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டுப்லஸ்ஸிஸ் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற பலமான அணிகள் இருக்கையில் இரண்டு அணிகளை மட்டும் தேர்வு செய்து இந்த 2 அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஷாட்டர் பார்மட் கிரிக்கெட்டில் எந்த ஒரு அணியும் வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறது. ஆனால் என்னை பொறுத்தவரை நல்ல அதிரடியான ஆட்டமும், அனுபவம் இருந்தால் அவர்களுக்கு இந்த தொடர் சாதகமாக அமையும்.

Wi

அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் அனுபவம் வாய்ந்த பல வீரர்கள் அணிக்கு திரும்பி உள்ளதால் அவர்கள் இம்முறை மிக பலமாக திகழ்வார்கள். ரசல், டுவைன் பிராவோ ஆகியோர் மீண்டும் டி20 அணிக்கு இணைந்துள்ளதால் அது அவர்களுக்கு மிகப் பெரிய பலத்தை அளிக்கும் அதே போன்று மற்றொரு அணியாக இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக திகழும். ஏனெனில் இந்திய அணியில் அனுபவம் மற்றும் அதிரடியும் கலந்து இருக்கிறது.

IND

விராட்கோலி தலைமையிலான இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள், வேகப்பந்து வீச்சாளர்கள், ஸ்பின்னர்கள், அதிரடி வீரர்கள் என கலவையான வீரர்கள் சமமான நிலையில் உள்ளதால் நிச்சயம் இந்தியா அணியும் பலம் வாய்ந்தது தான். என்னைப்பொறுத்தவரை இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரு அணிகள்தான் என்னுடைய பேவரைட் அணிகளாக டி20 உலக கோப்பையில் எதிர்பார்க்கிறேன் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement