ஹாட்ரிக் அரைசதத்துடன் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றிய சி.எஸ்.கே வீரர் – இனிமே அதகளம் தான்

நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்தது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இதில் பேட்டிங் விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 171 ரன்கள் குவித்தது. ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 46 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். அவரைத் தொடர்ந்து டேவிட் வார்னர் 55 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார்.

warner 1

இதன் பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் 18.3 ஓவரிலேயே வெற்றி பெற்றது. சென்னை அணியில் அதிகபட்சமாக ருத்ராஜ் 44 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். அவருக்கு இணையாக விளையாடிய டுப்பிளசிஸ் 38 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார். டூப்லஸ்ஸிஸ் சென்னை அணிக்காக விளையாடிய முதல் போட்டியில் பூஜ்ஜியம் ரன்களுக்கு அவுட்டானார்.

அதன் பின்னர் நடந்த இரு போட்டிகளிலும் 30 ரன்களுக்கு மேல் குவித்தார். அதன் பின்னர் கடந்த மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக அரைசதம் அடித்து, இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக அவர் மாறி இருக்கிறார்.

மொத்தமாக 6 போட்டிகளில் விளையாடியுள்ள டுப்பிளசிஸ் 270 ரன்கள் குவித்துள்ளார். இந்த தொடரில் இவரது பேட்டிங் அவெரேஜ் 67.50 மற்றம் ஸ்ட்ரைக் ரேட் 140.62 ஆகும். டூப்லஸ்ஸிஸ் இவ்வளவு அற்புதமாக விளையாடி வருவது அந்த அணியை மட்டுமல்லாமல், அவருடைய ரசிகர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தி உள்ளது.

- Advertisement -

faf 1

மேலும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் டூப்பிளெசிஸ் இதேபோல் தொடர் முழுவதும் விளையாடி சென்னை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு முன்னர் சென்னை அணிக்காக ஆரஞ்சு கேப்பை 2009ஆம் ஆண்டு ஹைடன் மற்றும் 2013ஆம் ஆண்டு மைக் ஹஸ்ஸி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.