தோனியிடம் இருக்கும் மிகப்பெரிய பலமே இதுதான். அவரை அடிச்சிக்க ஆளில்லை – டூபிளிஸ்சிஸ் புகழாரம்

Faf

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் பெரும் வரவேற்பு காரணமாக இந்த தொடரானது இந்த ஆண்டு பதிமூன்றாவது சீசனாக நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக இந்த தொடர் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

faf 2

இந்நிலையில் தற்போது ஓய்வில் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் தாங்கள் சந்தித்த பல்வேறு அனுபவங்களையும் சமூக வலைதளங்கள் மூலமாக ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர். மேலும் தங்களுக்குள்ளேயே நேரலையில் பேசிக்கொண்டு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதன்படி தற்போது தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான டூபிளிஸ்சிஸ் வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் தமீம் இக்பாலுடன் ஃபேஸ்புக்கில் நேரலையில் பேசினார்.

அப்போது அவர் தோனி குறித்த பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது : மற்றவர்களை கணிப்பதில் தோனி மிகச் சிறந்த வீரர். எப்போதும் அதிரடியாக முடிவுகளை எடுப்பார். மேலும் சூழ்நிலையை எவ்வாறு கையாள வேண்டும் மற்றும் எதிரணி வீரர்களை எப்படி மதிப்பிட வேண்டும் போன்ற கணிப்புகளை தோனி மிகச்சரியாக மேற்கொள்வார். போட்டியின் நிலை எங்கு சென்று கொண்டிருக்கிறது என்றும் அவருக்கு தெரியும்.

2018csk

அவரது கிரிக்கெட் மீது அவருக்கு இருக்கும் அளவுக்கு அதிகமான துணிச்சல் உணர்வு வேறு யாருக்கும் இல்லை. எனக்கு தெரிந்து தோனியின் பலமே நமது அணி வீரர்கள் மட்டுமின்றி எதிரணி வீரர்களின் மனநிலையும் கணிக்கும் திறனும் அவரிடம் உள்ளது. அதுவே அவரின் மிகப்பெரிய பலம் மேலும் அதிகமான துணிச்சல் மற்றும் தைரியமான முடிவு போன்றவையும் அவரது பலமாக பார்க்கிறேன். தோனியை கேப்டனாக பார்ப்பது என்பது ஒரு வித்தியாசமான உணர்வு. அணி கூட்டத்தில் ஒவ்வொரு முறையும் கேப்டன் தான் பேசுவார் என நினைத்துக் கொண்டிருப்பேன்.

- Advertisement -

ஆனால் இதில் தோனி முற்றிலும் மாறுபட்டவர் அணி கூட்டத்தில் அவருக்கு பெரிதாக நம்பிக்கை இருக்காது. கிரிக்கெட் குறித்த அறிவு அவருக்கு அதிகமாக உள்ளது. இருப்பினும் உள்ளுணர்வை கேட்டு செயல்படும் வீரராக தோனி இருக்கிறார் .மேலும் அவர் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சரியாக இருக்கும். போட்டியின் எந்த சூழ்நிலையிலும் பொறுமையை இழக்காமல் நிதானம் காப்பவர், மிகவும் அமைதியானவர். கிரிக்கெட்டில் அவரை விட ஒரு மிகப்பெரிய பினிஷருடன் நான் விளையாடியது கிடையாது.

Faf 1

அவரைப் பார்த்து வேறு யாரும் காப்பியடிக்க முயன்றால் அது நடக்காத ஒன்று. ஒரு பவுலரை தேர்வு செய்து அவரின் பந்துவீச்சில் ரன்களை சேர்க்க வேண்டும் என்பதில் தோனி தெளிவாக திட்டம் தீட்ட கூடியவர் என்றும் கூறினார். தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான டூபிளிஸ்சிஸ் கடந்த 2011ஆம் ஆண்டு சென்னை அணியில் இணைந்தார் அதன் பின்னர் தொடர்ந்து தற்போது வரை சென்னை அணிக்காக அவர் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.