சி.எஸ்.கே அணிக்காக இதுவரை யாரும் படைக்காத சாதனையை படைத்து அசத்திய டூபிளெஸ்ஸிஸ் – விவரம் இதோ

- Advertisement -

ஐபிஎல் 14வது சீசனின் 27வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இரண்டு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகளாக இருந்ததால் இப்போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார்.

rayudu 2

இதனை அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவற்ற நிலையில் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அம்பத்தி ராயுடு 72 ரன்கள், டுயூப்ளசிஸ் 50 ரன்கள், மொயீன் அலி 58 ரன்கள் எடுத்தனர். 219 ரன்கள் என்ற கடினமான இலக்கை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒப்பனர்களான ரோகித் ஷர்மாவும், குயின்டன் டீ காக்கும் அந்த அணிக்கு வலுவான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

- Advertisement -

கடைசி ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டபோது, அதிரடியாக ஆடிய பொல்லார்ட் 16 ரன்களை அடித்து மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முதல் இன்னிங்சில் ஆடிய அந்த அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனான் டூபிளெஸ்ஸிஸ் சென்னை அணிக்காக மிகப்பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்தினார்.

faf 1

முதல் இன்னிங்சில் 28 பந்துகளை எதிர்கொண்ட டூபிளெஸ்ஸிஸ் அரைசதம் அடித்து, பொல்லார்ட் பந்து வீச்சில் அவுட்டானார். இப்போட்டியிலும் அரை சதம் அடித்ததன் மூலமாக, ஒரு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக தொடர்ந்து 4 அரைசதங்கள் அடிக்கும் முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் டூபிளெஸ்ஸிஸ் . இதற்கு முந்தைய மூன்று போட்டிகளில் கொல்கத்தா, பெங்களூர், ஐதாராபாத் ஆகிய அணிகளுக்கு எதிராகவும் டுயூப்ளசிஸ் அரைசதம் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரில் 7 போட்டிகளில் களமிறங்கியுள்ள டுயூப்ளசிஸ் மொத்தம் 320 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். பஞ்சாப் அணியின் கேப்டன் கே எல் ராகுல் 331 ரன்கள் அடித்து முதிலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement