நான் பார்த்ததிலேயே இவர் தான் பெஸ்ட் பினிஷர் – டூபிளெஸ்ஸிஸ் கூறிய அந்த வீரர் யார் தெரியுமா ?

Faf

தென்னாப்பிரிக்க அணியைச் சேர்ந்த முன்னாள் கேப்டனான டூப்லெஸிஸ் கடந்த சில ஆண்டுகளாக சென்னை அணிக்காக துவக்க வீரராக விளையாடி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சிஎஸ்கே அணியின் துவக்க வீரராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டூப்லெஸிஸ் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கூட தனது அபாரமான பங்களிப்பை சென்னை அணிக்காக வழங்கினார்.

faf 1

இவருடைய அதிரடியான பேட்டிங் மட்டுமின்றி பீல்டிங்கிலும் இவரைப் போன்ற சிறப்பான வீரர் யாரும் இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு பவுண்டரி லைனில் இவர் பிடிக்கும் கேட்சிகளும் சரி, இவர் பிடிக்கும் பந்துகளும் சரி அதற்காகவே அவருக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை அணியில் வெளிநாட்டு வீரராக இவருக்கு சற்று ரசிகர்கள் அதிகம் என்றே கூறலாம்.

- Advertisement -

மேலும் சென்னை அணியின் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவாகவே அனைத்து அணியின் ரசிகர்களுக்கும் பிடித்த ஒரு வீரராக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஐபிஎல் முடிந்து நாடு திரும்பிய இவரிடம் ரசிகர்கள் சமூக வலைதளம் வாயிலாக பல கேள்விகளை கேட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது நீங்கள் விளையாடிய வீரர்களில் மிகச்சிறந்த பினிஷர் யார் என்ற கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது.

Faf

அந்தக் கேள்விக்கான பதிலாக அவர் அவருடைய நெருங்கிய நண்பரான டிவில்லியர்ஸை தான் சிறந்த பினிஷர் என்று கூறுவார் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக அவர் மகேந்திரசிங் தோனி தான் சிறந்த பினிஷர் என்று பதிலளித்தார். சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதற்காக சொல்லாமல் தான் பார்த்து ரசித்த சிறந்த பினிஷர் தோனி தான் என்று டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார். அவர் கூறியதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் ஒன்றும் இல்லை.

- Advertisement -

Faf 1

ஐபிஎல் தொடர் மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் தோனி எப்படிப்பட்ட பினிஷர் என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் அவர் தோனியின் பெயரைக் குறிப்பிட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை பொதுவாகவே தோனி பினிஷிங் ரோலில் இறங்கி இறுதி ஓவர்களில் காட்டும் அதிரடி நாம் பல ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம். மேலும் அதுமட்டுமின்றி முடிக்க முடியாத சில போட்டிகளை கூட தனது அதிரடியால் தோனி பினிஷிங் செய்து கொடுத்திருக்கிறார்.

Advertisement