காற்றில் பறந்து மனிஷ் பாண்டேவின் கேட்சை பிடித்து மிரளவிட்ட பாஃப் டூபிளெஸ்ஸிஸ் – என்ன கேட்ச்ப்பா (வைரலாகும் வீடியோ)

Faf-1

ஐபிஎல் தொடரின் 23வது லீக் போட்டி தற்போது டெல்லி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 61 ரன்களையும், வார்னர் 57 ரன்களை குவித்தனர்.

இறுதிநேரத்தில் அதிரடியாக விளையாடிய கேன் வில்லியம்சன் 10 பந்துகளில் 26 ரன்கள் குவித்தார். அதன் பின்னர் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக துவக்கவீரர் கெய்க்வாட் 75 ரன்களும், டூபிளெஸ்ஸி 56 ரன்களையும் அடித்து அசத்தினார். இந்நிலையில் இந்த போட்டியின்போது முதல் இன்னிங்ஸில் விளையாடி கொண்டிருந்த மணீஷ் பாண்டே 61 ரன்கள் எடுத்த நிலையில் சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு பந்தை தூக்கி அடிக்க அதனை பவுண்டரி லைனில் இருந்த சென்னை அணியின் வீரர் டு பிளிசிஸ் அதனை காற்றில் பறந்து அசத்தலாக கேட்ச் பிடித்து இருந்தார்.

அவர் பிடித்த இந்த கேட்ச் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவது மட்டுமின்றி இந்த தொடரில் பிடிக்கப்பட்ட மிகச்சிறந்த கேட்சிகளில் ஒன்றாகவும் மாற வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வீடியோ இதோ