இன்னும் 4 நாள் தான் இருக்கு. அதுக்குள்ள இப்படி ஒரு செய்தியா ? – சி.எஸ்.கே அணி சந்தித்துள்ள சறுக்கல்

CSK-1
- Advertisement -

இந்தியாவில் துவங்கி 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் பாதியில் ஒத்திவைக்கப்பட்ட 14-ஆவது ஐபிஎல் தொடரானது தற்போது இரண்டாவது கட்டமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்த தொடருக்கான அட்டவணை வெளியானதில் இருந்து ரசிகர்கள் இந்த தொடரை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக செப்டம்பர் 19ஆம் தேதி துபாயில் துவங்கும் முதல் போட்டியே மிகப்பெரிய போட்டியாக அமைந்துள்ளதால் ரசிகர்களுக்கு அது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

CSKvsMI

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் முதல் போட்டியில் மோதுவதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே துபாய் சென்றடைந்த சிஎஸ்கே மற்றும் மும்பை அணியில் சமீபத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி வீரர்களும் தற்போது இணைந்துள்ளனர். இதனால் நிச்சயம் இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த முதலாவது போட்டி துவங்க இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் தற்போது சிஎஸ்கே அணிக்கு பெரிய சறுக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. அந்த சறுக்கல் யாதெனில் சென்னை அணியின் துவக்க வீரராக விளையாடி வரும் தென்ஆப்பிரிக்க அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக டூபிளெஸ்ஸிஸ் தற்போது கரீபியன் லீக் தொடரில் விளையாடி வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற போட்டியின்போது தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் விளையாடாமல் இருந்தார்.

faf 1

அதுமட்டுமின்றி கரீபியன் லீக் தொடரின் இறுதிப்போட்டியிலும் அவரால் விளையாடமுடியாது என்று கூறப்படுகிறது. இதன்காரணமாக அடுத்து வரும் ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக அவர் விலகுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனெனில் தொடைப்பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் விரைவில் குணமடையாது என்றும் அந்த காயம் குணமடைய சில மாதங்கள் எடுத்துக் கொள்ளும் என்பதனால் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து டூபிளெஸ்ஸிஸ் விலகுவார் என்று கூறப்படுகிறது.

சென்னை அணியின் முக்கிய வீரராக விளையாடி வரும் டூபிளெஸ்ஸிஸ் துவக்க வீரராக இந்த 14 வது சீசனில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதுமட்டுமின்றி கரீபியன் லீக் தொடரிலும் சதமடித்து அசத்தலான பார்மில் இருந்த அவருக்கு ஏற்பட்டுள்ள காயத்தால் அவர் விளையாட முடியாத பட்சத்தில் அது சென்னை அணிக்கு ஒரு பலத்த அடி என்றே கூறலாம்.

Advertisement