டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வை அறிவிக்க இதுவே காரணம் – மனம்திறந்த டூப்ளசிஸ்

Faf-2

தென்னாபிரிக்க அணியை கேப்டனாக அனைத்து தர கிரிக்கெட் பார்மெட்களிலும் டூப்ளசிஸ் சிறப்பாக வழிநடத்தி உள்ளார். ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்ட் டெஸ்ட்டில் அறிமுகமானார். அந்தப் போட்டி விறுவிறுப்பாக சென்று டிரா ஆனது. அதில் டுபிளெசிஸ் 78 & 110 அடித்து அசத்தி ஆட்ட நாயகன் விருதும் பெற்றார்.

Faf-1

சர்வதேச கிரிக்கெட்டில் தென்னாபிரிக்க அணிக்காக 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டூப்ளசிஸ் 4,163 ரன்களை 40.02 என்ற சராசரியில் எடுத்துள்ளார். அதில் 10 சதங்களும், 21 அரை சதங்களும் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக நல்ல சக்ஸஸ் ரேட் வைத்திருக்கிறார் டுபிளெசிஸ். 18 வெற்றி, 15 தோல்வி என அவரது கேப்டன்சியில் தென் ஆப்பிரிக்கா நிலை பெற்றிருக்கிறது.

முதல் 27 டெஸ்ட்களில் கேப்டனாக 17 டெஸ்ட்கள் வென்றிருக்கிறார் டூப்ளெசிஸ், பிறகுதான அவரது கேப்டன்ஸி சரிவு கண்டது. இந்நிலையில் தற்போது கொரோனா தாக்கம் குறைந்து கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பித்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து அவர் திடீர் ஓய்வு முடிவினை அறிவித்துள்ளார். இந்த முடிவை தெளிவான மனநிலையில் தான் எடுத்துள்ளேன் ; அடுத்ததாக டி20 கிரிக்கெட்டில் என்னை ஆயத்தப்படுத்த உள்ளேன்.

faf

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில் : “நான் இந்த முடிவை தெளிவான மனநிலையில் தான் எடுத்துள்ளேன். அடுத்த அத்தியாயத்திற்குள் அடியெடுத்து வைக்க இதுவே சரியான தருணம். என் தாய்நாட்டுக்காக கிரிக்கெட்டின் அனைத்து பார்மெட்டுகளிலும் விளையாட எனக்கு கிடைத்த வாய்ப்பை கவுரவமாக பார்க்கிறேன். ஆனால் இப்போது நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துள்ளது.

- Advertisement -

faf 1

இதனால் நான் டெஸ்ட் வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டு டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்த உள்ளேன். அடுத்தடுத்த ஆண்டுகளில் ஐசிசி டி20 உலக கோப்பை தொடர்கள் நடைபெற உள்ளன. அதற்கு என்னை ஆயத்தப்படுத்த உள்ளேன்” என அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.