ரெய்னா சென்றால் என்ன ? அவரது இடத்திற்கு சரியான ஆள் வந்தாச்சு – சி.எஸ்.கே நிர்வாகம் வெளியிட்ட புகைப்படம்

பல்வேறு இன்னல்களை கடந்து தற்போது ஐபிஎல் தொடரின் 13 ஆவது சீசன் இன்னும் இரு வாரங்களில் துவங்க உள்ளது. இந்த தொடரின் 60 போட்டிகளும் துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய மூன்று மைதானங்களில் நடைபெற உள்ளன. இதற்காக ஏற்கனவே 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் பயணித்து விட்டன.

Dubai

தொடர் நெருங்க நெருங்க ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சிஎஸ்கே அணி தொடர் சரிவை சந்தித்து வருகிறது. ஏனெனில் அனைவரும் பயிற்சியை ஆரம்பித்த நேரத்தில் சிஎஸ்கே அணியில் இரண்டு வீரர்கள் மற்றும் 11 உதவியாளர்கள் என 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தற்போது நெகட்டிவ் ஆகி உள்ளது.

மேலும் சி.எஸ்.கே நிர்வாகத்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ரெய்னா இந்தியா திரும்பினார். இதனால் அடுத்தடுத்த சிக்கலை சந்தித்து வரும் சென்னை அணி எவ்வாறு மீண்டு வர போகிறது என்று ரசிகர்கள் அவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ரெய்னாவின் விலகளை அடுத்த அணிக்கும் பலம் சேர்க்கும் விதமாக இரண்டு வீரர்கள் அணியில் இணைந்து உள்ளனர்.

ஆம் தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான டூப்பிளசிஸ் நேற்று அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான லுங்கி நெகிடியுடன் துபாய் வந்து சேர்ந்தார். அவர் வந்தது சிஎஸ்கே அணிக்கு பலத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனை சி.எஸ்.கே அணி நிர்வாகம தங்களது ட்விட்டர் பக்கத்திலும் புகைப்படமாக பகிர்ந்துள்ளார்கள்.

- Advertisement -

Duplesis

ஏனெனில் ரெய்னாவின் இடத்தில் ஆட கச்சிதமான நபர் அவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே துவக்க வீரராகவும், நான்காவது வீரராகவும் விளையாடி நல்ல அனுபவம் உள்ள அவரின் வருகை தற்போது சி.எஸ்.கே அணிக்கு பெரிய நிம்மதியை தந்துள்ளது. மேலும் இது சிஎஸ்கே அணிக்கு நிச்சயம் பலத்தை தரும் என்றால் அது மிகையல்ல.