மும்மூர்த்திகள் இருப்பதால் எங்கவேனாலும் மோத தயார்..! சவால் விடும் தென்ஆப்பிரிக்கா வீரர்..! யார் தெரியுமா..?

Advertisement

தென்னாபிரிக்கா அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை செல்லவிற்கிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜுலே 12 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடரில் தங்கள் அணியில் உள்ள மூன்று பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசுவார்கள் என்று டுபிளெசிஸ் தெரிவித்துள்ளார்.
styne
இலங்கைக்கு எதிரான தொடரில் பங்கேற்பது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய தென்னாபிரிக்கா அணி கேப்டன் டுபிளெசிஸ் “எந்த அணிக்கு எதிராக விளையாடுகிறோம் என்பது முக்கியம் இல்லை, இலங்கை மைதானத்தில் உள்ள ஆடுகளங்கள் சூழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தாலும் கூட, எங்கள் அணியில் உள்ள வேக பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் ..

எங்கள் அணியில் ரபாடா, ஸ்டெயின், பிளாண்டர் போன்ற சிறப்பான பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் அணைத்து விதமான சூழ் நிலைகளிலும் சிறப்பாக செயல்படுவார்கள்.ஆசிய நாடுகளில் ஸ்டெயின் சிறப்பாக பந்து வீசி பல சாதனைகளை படைத்துள்ளார்.’ என்று தனது அணியின் பந்து வீச்சாளர்கள் மீது அபார நம்பிக்கை வைத்துள்ளார் டுபிளெசிஸ்.
philander
தென்னாப்ரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டேயின் அந்த அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக கருதப்படுபவர். இரண்டரை ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மீண்டும் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

Advertisement