- Advertisement -
இந்திய கிரிக்கெட்

உலகிலேயே எதிர்கொள்வதற்கு மிகவும் கடினமான பவுலரான பும்ரா.. அங்க மட்டும் வந்துரக்கூடாது.. டு பிளேஸிஸ்

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். 2016ஆம் ஆண்டு அறிமுகமான அவர் வித்தியாசமான ஆக்சனை வைத்து எதிரணிகளுக்கு சவாலைக் கொடுத்து வருகிறார். இந்தியாவுக்காக 3 விதமான கிரிக்கெட்டிலும் சுமார் 10 வருடங்களாக விளையாடி வரும் அவர் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

குறிப்பாக 2024 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற பும்ரா இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அதே போல வித்தியாசமான ஆக்சனை வைத்துக்கொண்டு அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியாது என்று பலரும் கணித்தார்கள். இருப்பினும் 2018இல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமான ஜஸ்ப்ரித் பும்ரா சிறப்பாக விளையாடி இன்று ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராக ஜொலித்து வருகிறார்.

- Advertisement -

கடினமான பவுலர்:

கடந்த பார்டர் – கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்ட ஜஸ்ப்ரித் பும்ரா 32 விக்கெட்டுகள் சாய்த்து இந்தியாவின் வெற்றிக்கு போராடினார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 20க்கும் குறைவான சராசரியில் 200 விக்கட்டுகள் எடுத்த முதல் பவுலர் என்ற உலக சாதனையை அவர் படைத்தார். அதனால் பும்ரா உலகின் நம்பர் ஒன் பவுலர் என்று வாசிம் அக்ரம் போன்ற பல ஜாம்பவான்கள் பாராட்டினர்.

அது மட்டுமின்றி ஐபிஎல் போன்ற டி20 தொடர்களிலும் அவர் அனைத்து நேரங்களிலும் துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசி வெற்றியை பறிக்கக்கூடிய திறமையைக் கொண்டுள்ளார். அதனால் பும்ரா இந்தியாவுக்காக விளையாடுவதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்று விராட் கோலி 2024 டி20 உலகக் கோப்பை வென்ற பின் தெரிவித்ததை மறக்க முடியாது.

- Advertisement -

டு பிளேசிஸ் பாராட்டு:

இந்நிலையில் உலகிலேயே ஜஸ்ப்ரித் பும்ரா எதிர்கொள்வதற்கு மிகவும் கடினமான பவுலர் என்று தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் பஃப் டு பிளேஸிஸ் தெரிவித்துள்ளார். அதனால் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ20 தொடரில் விளையாடுவதற்கு அவர் வந்து விடக்கூடாது என்றும் டு பிளேஸிஸ் கலக்கலப்பாக தெரிவித்துள்ளார். ஏனெனில் தங்களுடைய சொந்த ஊரில் பும்ராவை வெற்றிகரமாக எதிர்கொள்வது தமக்கு கடினமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவை அவமானத்திலிருந்து காப்பாற்றிய.. விராட், ரோஹித் பற்றி மரியாதையா பேசுங்க.. கம்பீரை சாடிய கைப்

இது பற்றி மும்பையில் நடைபெற்ற எஸ்ஏ20 இந்தியா நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “பும்ரா உலகிலேயே எதிர்கொள்வதற்கு மிகவும் கடினமான பவுலர். எனவே அவர் எஸ்ஏ20 தொடரில் விளையாடுவதை நாம் பார்க்க மாட்டோம்” என்று நம்புகிறேன் எனக் கூறினார். இதைத் தொடர்ந்து பும்ரா தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -