இவர் ஆடுவதும் ஆடாததும் தோனி ஒருவர் கையில் தான் உள்ளது. என்ன முடிவு செய்யப்போகிறார் தோனி ? – விவரம் இதோ

இந்த வருட ஐபிஎல் தொடரில் கடைசிவரை புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் இருந்துகொண்டே தொடரிலிருந்து வெளியேறிவிட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வெளியேறி விட்டதால் அடுத்த வருடத்திற்கான தற்போது சென்னை தயாராகி வருகிறது.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும் இதன் காரணமாக எப்படியாவது அணியை மிகச்சரியாக கட்டமைக்க வேண்டும் என்று தற்போது உழைத்து வருகிறார்கள்.

குறிப்பாக இந்த வருடம் நன்றாக ஆடாத அனைத்து வீரர்களும் கண்டிப்பாக வெளியேற்றப்படுவார்கள் என்று தெரிகிறது. கேதர் ஜாதவ், ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு போன்றவர்களுக்கெல்லாம் கண்டிப்பாக இடம் கிடைக்காது. ஏனெனில் இவர்களுக்கு வயதும் ஆகிவிட்டது. அதே நேரத்தில் தோனியும் அடுத்த வருடம் விளையாடுவாரா என்பது சந்தேகம் இருந்த நிலையில் அவர் விளையாடுவது உறுதியாகி விட்டது.

அவரை வைத்துதான் அணியை கட்டமைக்க வேண்டும். ஒரு இளம் அணியை கட்டமைக்க வேண்டும். கண்டிப்பாக பல வீரர்களுக்கு இடம் இருக்காது. அதே நேரத்தில் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, சாம் கரன் ஆகியோருக்கு இன்னும் சில வருடங்கள் அணியில் இடம் கிடைக்கும் ஷேன் வாட்சன் இதுதான் சென்னை அணிக்காக ஆடும் கடைசி தொடர்.

faf

அதே நேரத்தில் பாப் டூ பிளேஸிஸ் தொடரின் தொடக்கத்தில் நன்றாக ஆடினார். கடைசியில் போகப்போக அவரது ஆட்டம் மாறிவிட்டது. ஆனாலும் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் அவர் இருக்கிறார். அடுத்த வருடம் சென்னை அணியில் இவர் இருப்பாரா ? என்பது தோனியின் கையில்தான் இருக்கிறது பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -