சிம்பிளான ரியாக்ஷன் மூலம் இந்திய அணி ரசிகர்களை கவர்ந்த தெ.ஆ கேப்டன் டுபிளிஸ்சிஸ் – விவரம் இதோ

Faf-2
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. நேற்று முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக தேனீர் இடைவேளையின்போது நிறுத்தப்பட்டது. அப்போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்திருந்தது.

Rohith

- Advertisement -

ரோகித் 115 ரன்களுடனும் அகர்வால் 84 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்த இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வந்தனர். இந்நிலையில் 176 ரன்களை ரோகித் அடித்து இருந்தபோது மகாராஜ் பந்துவீச்சில் ஸ்டம்பிங் ஆகி ஆட்டமிழந்து வெளியேறினார். ரோஹித் துவக்க வீரராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியுள்ளார். மேலும் அவர் இரட்டை சதத்தை அவர் தவறி விட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரோஹித் விக்கெட் விழுந்தபோது தென்ஆப்பிரிக்க வீரர்கள் அனைவரும் ரோஹித்தின் விக்கெட்டை கொண்டாடினர். ஆனால் அந்த அணியின் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் நேராக ரோகித் சர்மாவை நோக்கி சென்று அவரை சிறப்பிக்கும் விதமாக அவருக்கு கைகொடுத்து கட்டிப்பிடித்து வழி அனுப்பினார்.

Faf 1

இதனைக்கண்ட மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் கரகோஷத்தை எழுப்பி ஆர்ப்பரித்தனர். இந்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது மேலும் இந்த செய்தி அதிகளவு பகிரப்படும் வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement