இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் வேளையில் இந்திய அணி தங்களது முதலாவது சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதனை தொடர்ந்து இன்று ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இரண்டாவது போட்டியில் விளையாட இருக்கிறது.
அபிஷேக் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த : டூபிளெஸ்ஸிஸ்
இந்த டி20 தொடரில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அபிஷேக் சர்மாவின் பேட்டிங் பார்ம் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன. ஏனெனில் லீக் சுற்று போட்டிகளில் மூன்று ஆட்டங்களில் டக் அவுட்டான அவர் சூப்பர் 8 சுற்று போட்டியின் போதும் வெறும் 15 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். இதன் காரணமாக அவரது ஆட்டம் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன.
அதேவேளையில் அவருக்கு ஆதரவாகவும் சில முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான டூப்ளிசிஸ் அபிஷேக் சர்மாவை ஆதரித்து சில கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : தற்போதுள்ள கிரிக்கெட்டில் அனலிஸ்ட்டுகளின் பங்கு அதிகரித்துவிட்டது.
ஒரு பேட்ஸ்மேன் எவ்வாறு விளையாடுகிறார்? என்பதை அவர்கள் கணித்து அதற்கேற்றார் போல் பந்து வீச்சாளர்களுக்கு திட்டத்தை கொடுத்து விடுகிறார்கள். அதேபோன்று அபிஷேக் ஷர்மாவின் பலவீனத்தையும் கண்டறிந்து சில விடயங்களை அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதனை எதிர்த்து அபிஷேக் சர்மா சிறப்பாக விளையாட வேண்டும். யார் என்ன சொன்னாலும் அதை பற்றி யோசிக்காமல் தனது பலத்தின் மீது நம்பிக்கை வைத்து நம்பிக்கையுடன் விளையாட வேண்டும்.
இதையும் படிங்க : ஜிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில் இந்த மாற்றங்களை செய்யுங்க – பாண்டிங் ரவி சாஸ்திரி கருத்து
அதோடு ஸ்லோ பந்துகளுக்கு எதிராக அவர் தடுமாறி வந்தாலும் அந்த பந்துகளை எவ்வாறு எதிர்கொண்டு விளையாட வேண்டும் என்பதை அவர் தெரிந்து கொண்டால் நிச்சயம் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என அபிஷேக் சர்மாவுக்கு டூபிளெஸ்ஸிஸ் அறிவுரை கூறியது குறிப்பிடத்தக்கது.



