ஜிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில் இந்த மாற்றங்களை செய்யுங்க – பாண்டிங் ரவி சாஸ்திரி கருத்து

IND vs ZIM
- Advertisement -

நடைபெற்று வரும் 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று ஆட்டங்களில் மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஏ பிரிவில் முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. இதன் காரணமாக சூப்பர் 8 சுற்று போட்டிகளிலும் இந்திய அணியின் ஆதிக்கம் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஜிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில் இந்த மாற்றங்களை செய்யுங்க : பாண்டிங்

ஆனால் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அகமதாபாத் நகரில் நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் முதல் ஆட்டத்தில் விளையாடியிருந்த இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் படுமோசமான தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கடினமாகியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் கூறியதாவது : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியின் போது அக்சர் பட்டேல் விளையாடாதது மிகப்பெரிய தவறு.

ஏனெனில் தென்னாப்பிரிக்கா அணியில் இடது கை ஆட்டக்காரர்கள் அதிகமாக இருப்பதால் அக்சர் பட்டேல் விளையாடவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் அந்த போட்டியில் அவர் விளையாடியிருந்தால் நல்ல மாற்றம் இருந்திருக்கும். என்னை பொருத்தவரை சென்னையில் நடைபெற இருக்கும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியின் போது அக்சர் பட்டேல் கட்டாயம் விளையாட வேண்டும். அதேபோன்று குல்தீப் யாதவை விளையாடினாலும் இந்திய அணிக்கு நல்லது தான் என்று கூறினார்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்ட ஷிவம் துபே – விவரம் இதோ

அக்சர் பட்டேல் மீண்டும் இந்திய அணிக்கு வர வேண்டும் ஏனெனில் வாஷிங்டன் சுந்தரை விட அனுபவம் அதிகம் கொண்ட அக்சர் பட்டேல் வருண் சக்கரவர்த்தியுடன் இணைந்து விளையாடினால் சுழற்பந்து வீச்சின் பலமும் அதிகரிக்கும். அதோடு கூடுதலாக பேட்டிங்கிலும் அவரால் கை கொடுக்க முடியும் என ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement