விராட் கோலியிடம் இருக்கும் அதே திறமையை இவரிடம் பார்க்கிறேன் – டூபிளெஸ்ஸிஸ் குறிப்பிட்ட அந்த பேட்ஸ்மேன் யார் தெரியுமா ?

Faf

நவீன கிரிக்கெட்டின் தலை சிறந்த பேட்ஸ்மேனாக பார்க்கப்படுபவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. தற்போது உள்ள மூன்று வகை கிரிக்கெட்டிலும் தனது அட்டகாசமான பேட்டிங் திறனால் அனைவரது பாராட்டுகளையும் கோலி பெற்றுவருகிறார். இந்த காலகட்டத்தில் தலை சிறந்த பேட்ஸ்மேன்களாக விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் பார்க்கப்பட்டு வருகின்றனர்.

Kohli

தற்போது அந்த வரிசையில் பாகிஸ்தான் அணியின் இளம் வீரரான பாபர் அசாம் இணைந்துள்ளார். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக தனது அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தும் பாபர் அசாம் நிச்சயம் இந்த நான்கு வீரர்களுடன் இணைந்து பேசும் அளவிற்கு திறமை கொண்டவர் என்று பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும் அடிக்கடி தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது பாபர் அசாமை விராட் கோலியுடன் ஒப்பிட்டு தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி பேட்ஸ்மேனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான டு பிளிசிஸ் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : பாகிஸ்தான் அணியின் சூப்பர் ஸ்டார் பாபர் அசாம் மற்றும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆகியோரிடம் ஒரே ஒற்றுமையை பார்க்கிறேன்.

Azam

அவர்கள் இருவரும் மிகவும் உயர்தர வீரர்கள். கடந்த ஒரு வருடமாக பாபர் அசாம் அவரது அடுத்த இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். மேலும் அவர் சிறப்பான எதிர்காலத்தை பெற்றுள்ளார். டி20 கிரிக்கெட்டில் ஏராளமான ஆச்சரியத்தை அவர் நிச்சயம் அளிப்பார். விராட் கோலி அளவிற்கு உடல் வலிமையை பெற்றிருக்கவில்லை என்று பலர் அவரை நினைத்திருக்கலாம்.

- Advertisement -

azam

ஆனாலும் அவர் டி20 போட்டிகளில் குறிப்பிடத்தகுந்த வகையில் விளையாடி வருகிறார். மேலும் கோலியின் அளவிற்கு அவரால் சாதனையையும் படைக்க முடியும் என்று டு பிளிசிஸ் புகழாரம் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.