Facebook : கடந்த சில வாரத்திற்கு முன் பேஸ்புக் செயல்படாமல் இருந்ததற்கு இதுதான் காரணமாம் – நிர்வாகம் வெளியீடு

Whatsapp
- Advertisement -

தற்போது உலக மக்களின் பொழுதுபோக்கு மற்றும் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டது சமூக வலைதளங்கள். அதிலும் குறிப்பாக பேஸ்புக் , வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் மக்கள் மத்தியில் மிகப்பிரபலமான செயலியாக பயனாளர்கள் மத்தியில் வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

wat

இந்நிலையில் கடந்த வாரம் இந்தியா முழுவதும் பலருக்கு பேஸ்புக் பக்கத்தில் உபயோகம் பாதிக்கப்பட்டது. மேலும், பேஸ்புக் நிறுவனத்தால் வாங்கப்பட்ட வாட்சப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பேஸ்புக் நிறுவனம் சார்ந்த அனைத்து செயலிகளிலும் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. அதன்படி சிலமணி நேரங்கள் செயல்படாமல் இருந்தது.

- Advertisement -

அதற்கான காரணத்தை தற்போது பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி அந்நிறுவனம் தெரிவித்ததாவது : பேஸ்புக் சிலமணி நேரங்கள் செயல்படாமல் இருந்ததற்கும், பேஸ்புக் குழுமத்தை சேர்ந்த மற்ற செயலிகள் சில மணி நேரங்கள் பிரச்சனைக்கு உள்ளானதற்கு வருந்துகிறோம். சர்வரில் ஏற்பட்ட குறைபாட்டினால் இந்த பாதிப்பு ஏற்பட்டது.

wats

மேலும், தொடர்ந்து எங்களது சர்வரை கவனித்து வருகிறோம். தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் சர்வரில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதனை உடனடியாக சரிசெய்ய நாங்கள் தீவிரமாக வேலை செய்து வருகிறோம் என்று பேஸ்புக் நிர்வாகக்குழு தரப்பில் அறிக்கை வெளியாகியுள்ளது.

Advertisement