காயம் காரணமாக உ.கோ அணியிலிருந்து வெளியேறிய முரட்டு ஆல்ரவுண்டர் – வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அடி

Allen
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரானது நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் தற்போது தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வர சூப்பர் 12 ஆட்டங்கள் 23-ஆம் தேதியிலிருந்து துவங்க இருக்கின்றன. இந்த தொடருக்கான நடப்புச் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் இடம்பிடித்திருந்த 15 வீரர்களும் மிகச்சிறப்பான வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

WI

- Advertisement -

இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் துவங்க இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் அந்த அணியில் இருந்து ஒரு முன்னணி ஆல்ரவுண்டர் காயம் காரணமாக வெளியேறியுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இந்த விடயம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு பல அதிரடி ஆல்ரவுண்டர்களை கொண்ட அணியாக விளங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. தற்போது 5 ஆண்டுகளாகவே டி20 உலகக்கோப்பை நடைபெறாமல் இருந்ததால் தற்போது வரை நடப்பு சாம்பியனாக இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த வருடமும் கோப்பையை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ள அணியாக கருதப்படுகிறது.

allen 1

ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அனைவரும் அதிரடியான வீரர்கள் மட்டுமின்றி அனுபவம் வாய்ந்த வீரர்கள் என்பதுதான். இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் பங்கேற்று இருந்த சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஃபேபியன் ஆலன் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறி உள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியா வேணாம். இவரை சேருங்க கண்டிப்பா ஜெயிக்கலாம் – மான்டி பனேசர் கருத்து

அவருக்கு பதிலாக ரிசர்வ் வீரராக இருந்த அகில் ஹுசேன் அணியில் இணைந்துள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பேபியன் ஆலன் சுழற்பந்துவீச்சாளர் என்பது மட்டுமின்றி அதிரடியாக பேட்டிங் செய்யக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement