
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது அந்நாட்டு ரசிகர்களிடம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பரம எதிரி இந்தியாவுக்கு எதிராக 228 ரன்கள் வித்தியாசத்தில் வரலாறு காணாத படுதோல்வியை சந்தித்ததால் கேப்டன் பாபர் அசாம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். மேலும் அந்த தோல்வியால் பாகிஸ்தான அணியில் விரிசல் மற்றும் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
அத்துடன் பிஎஸ்எல் கோப்பையை வென்ற அனுபவம் மிகுந்த ஷாஹீன் அப்ரிடி பாகிஸ்தானின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட வேண்டுமென்று ஒரு தரப்பினர் அந்நாட்டில் பேசி வருகின்றனர். இந்நிலையில் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் பாபர் அசாம் தம்மை தொட முடியாத அளவுக்கு இன்று கூட தம்மால் மெய்டன் ஓவரை வீசி திணறடிக்க முடியும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது ஆசிப் அதிரடியான கருத்தை வெளியிட்டுள்ளார்.
பரபரப்பான கருத்து:
அத்துடன் சல்மான் ஆஹா ஒரு பேட்ஸ்மேனே கிடையாது என்று தெரிவிக்கும் அவர் பாகிஸ்தான் அணியில் நிலவும் பல்வேறு பின்னடைவான விஷயங்கள் பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இன்று கூட என்னால் டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாமுக்கு எதிராக மெய்டன் ஓவரை வீச முடியும். குறிப்பாக நல்ல லென்த் பந்துகளை வீசினால் அவரால் உங்களை அடிக்க முடியாது”
“மேலும் தற்போது பாபர் அசாமுக்கு பதிலாக மாற்று கேப்டனை நியமிப்பதற்கு நம்மிடம் சரியான வீரர் இல்லை. ஷாஹீன் அப்ரிடியை கேப்டனாக்க ஷாஹித் அப்ரிடி முயற்சித்தாலும் அது எளிதல்ல. அதே போல ஆகா சல்மானை நான் ஒரு வீரராகவே கருத மாட்டேன். அவர் நேரத்தை வீணடிப்பவர் (வேஸ்ட்). ஏனெனில் பாகிஸ்தான் ஏற்கனவே நிறைய ரன்கள் குவித்தால் மட்டுமே அவர் மிடில் ஆர்டரில் கொஞ்சம் ரன்கள் அடிப்பார்” என்று கூறினார்.
அத்துடன் அனைவரும் சொல்வது போல ஹரிஷ் ரவூப், ஷாஹீன் அப்ரிடி ஆகியோரால் பாகிஸ்தான் உலக தரமான வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டிருக்கவில்லை என்றும் அவர் அதிரடியாக பேசியது பின்வருமாறு. “நம்முடைய அணியில் சராசரியான பவுலர்கள் தான் இருக்கின்றனர். ஸ்பெஷலாக யாரும் இல்லை. மேலும் தற்போது நாசீமுக்கு பதிலாக தேர்வாகியுள்ள ஹசன் அலி கேப்டன் பாபர் அசாம் மற்றும் இதர வீரர்களை திண்று விடக்கூடிய அளவுக்கு சுமாரானவர்”
இதையும் படிங்க: விராட், ரோஹித்தை வேற லெவல் குவாலிட்டி ப்ளேயரான.. அவர் தான் 2023 உ.கோ தொடரில் அனலை தெறிக்க விடப்போறாரு – கம்பீர் கருத்து
“சொல்லப்போனால் பாகிஸ்தான் வாரியத்தில் உயரிய பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவால் மட்டுமே அவர் அணியில் இருக்கிறார். அவரை தேர்வு செய்பவர்கள் வெளியில் இருக்கும் தரமான மற்ற வீரர்களை தேர்வு செய்ய மாட்டார்கள்” என்று கூறினார். இந்த சூழ்நிலையில் இந்தியாவில் நடைபெறும் 2023 உலக கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் கேப்டனாக செயல்படுவார் என்று அந்நாட்டு வாரியம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.