- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தோனியால் கூட பாகிஸ்தானை காப்பாத்த முடியாதுன்னு அப்போவே தெரியும்.. காரணம் இது தான்.. சனா மிர் விளாசல்

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. அதில் முகமது ரிஸ்வான் தலைமையில் விளையாடும் நடப்புச் சாம்பியன் பாகிஸ்தான் தங்களுடைய முதல் 2 போட்டிகளில் நியூசிலாந்து மற்றும் இந்தியாவிடம் தோல்வியை சந்தித்தது. அதனால் தொடர் துவங்கிய 5 நாட்களில் பாகிஸ்தான் செமி ஃபைனலுக்கு தகுதி பெற முடியாமல் பரிதாபமாக வெளியேறியது.

குறிப்பாக துபாயில் நடைபெற்ற பரம எதிரி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் போராடாமலேயே 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இது மட்டுமின்றி சமீப காலங்களாகவே ஐசிசி தொடர்களில் ஜிம்பாப்வே, அமெரிக்கா போன்ற கத்துக்குட்டிகளிடம் பாகிஸ்தான் பரிதாபமாக தோற்றது. அதனால் அந்நாட்டு முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் பெரிய ஏமாற்றத்தை சந்தித்துள்ளார்கள்.

- Advertisement -

தோனியால் கூட முடியாது:

இந்நிலையில் தற்போதைய பாகிஸ்தான் அணியை 2007 டி20 உலகக் கோப்பை வென்ற எம்எஸ் தோனி, 2009 டி20 உலகக் கோப்பை வென்ற யூனிஸ் கான் போன்ற ஜாம்பவான் கேப்டன்களால் கூட வெற்றிப்பாதையில் அழைத்து வர முடியாது என அந்நாட்டின் முன்னாள் வீராங்கனை சனா மிர் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் தேர்வு செய்துள்ள 15 வீரர்களை வைத்து எம்எஸ் தோனி அல்லது யூனிஸ் கான் ஆகியோரை கேப்டனாக நியமித்தால் கூட உங்களது அணியை வைத்து எதுவும் செய்ய முடியாது”

“ஏனெனில் இந்த அணி சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் தேர்வு செய்யப்படவில்லை. 100-2 என துபாயில் இந்தியா விளையாடிக் கொண்டிருந்த போது எனது நண்பியிடமிருந்து மெசேஜ் வந்தது. அதில் 100-2 என்ற சூழ்நிலையிலேயே போட்டி முடிந்து விட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் பாகிஸ்தான் வெற்றி முடிந்து விட்டதாக நம்முடைய அணி அறிவிக்கப்பட்ட போதே நான் சொன்னேன்”

- Advertisement -

தவறான தேர்வு:

“15 பேர் கொண்ட அறிவிக்கப்பட்ட போது நாம் பாதித் தொடரை இழந்து விட்டோம். துபாயில் ஒரு போட்டியில் விளையாடப் போகிறோம் என்பது தெரிந்தும் எப்படி தேர்வாளர்கள் 2 பகுதி நேர ஸ்பின்னர்களை கொண்டு வர முடியும். ஒருநாள் கிரிக்கெட்டில் அப்ரார் அகமது இன்னும் புதியவர். கடந்த 5 மாதங்களில் நம்முடைய ஸ்பின்னர்கள் வெறும் 2 விக்கெட் மட்டுமே எடுத்து 165 ரன்கள் கொடுத்துள்ளார்கள்”

இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேறியதால் தலைகீழாக மாறப்போகும் பாக் வாரிய நிலைமை – வெளியான ரிப்போர்ட்

“ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்காவுக்கு எதிராக வெற்றி பெற்ற கடைசி 2 ஒருநாள் தொடர்களில் முக்கிய பங்காற்றிய வீரர்களை தேர்வாளர்கள் இந்தத் தொடரில் நீக்கி விட்டார்கள்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் தங்களது கடைசி போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக ஆறுதல் வெற்றியை பெறும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.

- Advertisement -