IND vs AUS : அவரே வந்தாலும் இந்தியாவை காப்பாற்றுவது கஷ்டம் தான் – காரணத்துடன் எச்சரிக்கும் முன்னாள் வீரர்

- Advertisement -

உலக டி20 சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வரும் இந்தியா முதல் போட்டியில் தோல்வியடைந்து 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் பின்தங்கியுள்ளது. உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக இருந்தும் விரைவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியாவிடம் சொந்த மண்ணில் இந்தியா தோற்றது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக மொகாலியில் நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் 209 ரன்களை இலக்காக நிர்ணயித்ததால் இந்தியாவின் வெற்றி உறுதியென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பந்து வீச்சில் முதல் ஓவரிலிருந்தே ரன்களை வாரி வழங்கிய பவுலர்கள் 211 ரன்களைக் கொடுத்து இந்தியாவின் வெற்றியை கோட்டை விட்டனர்.

Rohit Sharma Bhuvneswar Kumar

- Advertisement -

அதிலும் 3 வருடங்கள் கழித்து சம்பந்தமின்றி தேர்வு செய்யப்பட்ட உமேஷ் யாதவ் முழுமையான 4 ஓவர்களை வீச முடியாத அளவுக்கு 2 ஓவரிலேயே 27 ரன்களை கொடுக்க காயத்திலிருந்து திரும்பிய ஹர்ஷல் படேல் அரை சதத்தை தவறவிட்டு 49 ரன்கள் கொடுத்தார். ஆனால் பொறுப்புடன் செயல்பட வேண்டிய சீனியர் புவனேஸ்வர் குமார் 19வது ஓவரில் எதிரணிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட போது கொஞ்சமும் அனுபவத்தை காட்டாமல் 18 ரன்களை வாரி வழங்கி கேரியரில் முதல் முறையாக அரை சதம் கடந்து 52 ரன்களை கொடுத்து வெற்றியை தாரை வார்த்தார்.

பும்ராவே வந்தாலும்:
மொத்தத்தில் கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியது இந்தியாவின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. அத்துடன் சமீபத்திய ஆசிய கோப்பையிலும் இதேபோல் கடைசி கட்ட ஓவர்களில் புவனேஸ்வர் குமார் போன்றவர்கள் சொதப்பியதால் தற்சமயத்தில் இந்தியாவின் டெத் ஓவர் பவுலிங் தான் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. ஆனால் அந்தப் போட்டிகளில் டெத் ஓவர் ஸ்பெலிஷ்ட் என்றழைக்கப்படும் நம்பிக்கை நட்சத்திர முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் விளையாடாதது தோல்வி பரிசாக கிடைத்த நிலையில் நாக்பூரில் நடைபெறும் 2வது போட்டிக்கு அவர் திரும்புருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Jasprit Bumrah

ஆனால் இந்தத் தொடர் மட்டுமல்லாது உலக கோப்பையிலும் ஜஸ்பிரித் பும்ராவே வந்தாலும் இந்தியாவின் டெத் ஓவர் பௌலிங் தடுமாறுவதில் பெரிய மாற்றம் நிகழாது என்று முன்னாள் இந்திய வீரர் ஆர்பி சிங் எச்சரித்துள்ளார். நல்ல பார்மில் இருந்த கேஎல் ராகுல் காயமடைந்து அணிக்கு திரும்பி தடுமாறுவதைப் போல் காயத்திலிருந்து திரும்பினாலும் பழைய பன்னீர்செல்வமாக பந்து வீச பும்ராவுக்கும் கால அவகாசம் தேவைப்படும் என்பதால் உடனடியாக எந்த முன்னேற்றமும் நிகழாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“டி20 உலக கோப்பைக்கு முன்பாக இதுபோன்ற தோல்விகள் நல்ல அறிகுறிகள் கிடையாது. ஆசிய கோப்பையில் நாம் தோற்ற போது ஹர்ஷல் படேல் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இல்லாதது தான் காரணமென்று நினைத்தோம். ஆனால் இப்போது ஹர்ஷல் படேல் வந்தும் இந்தியா தோற்றது. அதேபோல் அடுத்த 2 போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா வந்தாலும் இந்தியா தோற்க வாய்ப்புள்ளது. எனவே நம்முடைய ஸ்டார் பவுலர் காயத்திலிருந்து திரும்பியதும் உடனடியாக போட்டியை வென்று கொடுப்பார் என்று எதிர்பார்க்கக்கூடாது”

RP-Singh

“விரைவில் உலகக்கோப்பை நடைபெறும் நிலையில் இந்திய அணியின் செயல்பாடுகள் மந்தமாகியுள்ளது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா சேசிங் செய்யும் போது போட்டியின் எந்த இடத்திலும் இந்தியா கொஞ்சமும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மறுபுறம் ஆஸ்திரேலியா சீரான இடைவெளிகளில் பவுண்டரிகளை அடித்து சிங்கிள் எடுத்துக் கொண்டிருந்தது. உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகள் எடுத்த அந்த ஒரு ஓவரைத் தவிர எஞ்சிய ஓவர்களில் இந்தியா தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பந்து வீசவில்லை.

- Advertisement -

இது நுணுக்கத்தைப் பொருத்துது கிடையாது. ஆனால் இந்திய பவுலர்கள் தங்களுடைய திட்டங்களை செயல்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்”. “மேலும் யார்கர் பந்துகளை வீசும்போது உள் வட்டத்திற்குள் தேர்ட் மேன் மற்றும் பாயிண்ட் ஃபீல்டர்கள் வைப்பதற்கு நீங்கள் பயப்படக்கூடாது. இந்திய பவுலர்கள் நிறைய மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. இல்லையெனில் இந்தியாவால் 150 ரன்களைக் கூட கட்டுப்படுத்த முடியாது” என்று கூறினார்.

இதையும் படிங்க : IND vs AUS : அதனால் தான் தோனி சிறந்தவர், நேரலையில் டிகே தவறை சுட்டிக்காட்டிய ஜாம்பவான் – நடந்தது என்ன

அவர் கூறுவது போல கிரிக்கெட் என்பது 11 பேர் கொண்ட அணி விளையாட்டு என்ற நிலைமையில் காயத்திலிருந்து திரும்பும் ஜஸ்பிரித் பும்ரா உடனடியாக போட்டியை வென்று தருவார் என்று எதிர்பார்ப்பதில் எவ்வித நியாயமுமில்லை என்றே கூறலாம்.

Advertisement