முடிவுற்ற இந்தியா மற்றும் அஃப்கானிஸ்தான் வரலாற்று டெஸ்ட் தொடர்.! சாதனை பட்டியல் விவரம்..!

indiaafgan
- Advertisement -

நேற்று(ஜூன்15) நடந்து முடிந்த இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரா வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நிகழ்ந்த பல்வேறு சாதனைகளை பற்றி கொஞ்சம் பார்வையிடலாம்.

india

- Advertisement -

டெஸ்ட் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி

இந்த போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இது கிரிக்கெட் டெஸ்ட் வரலாற்றில் மாபெரும் வெற்றி என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னால் இந்திய அணி பெற்ற மாபெரும் வெற்றிப் பட்டியல் இதோ.

2007, மிர்பூர் – இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள், வங்கதேசத்திற்க்கு எதிராக

- Advertisement -

2017, நாக்பூர் – இன்னிங்ஸ் மற்றும் 239, இலங்கைக்கு எதிராக

1998, கொல்கத்தா – இன்னிங்ஸ் மற்றும் 219 ரன்கள், ஆஸ்திரலியாவிற்கு எதிராக

- Advertisement -

இந்தியாவில் குறைந்த பந்துகளில் நிறைவடைந்த டெஸ்ட்.

afganindia

5 நாள் நடக்க வேண்டிய இந்த டெஸ்ட் போட்டி 2 நாட்களுக்குள் முடிவடைந்தது. இந்த போட்டியில் மொத்தம் 171.2 ஒவர்கள் மட்டுமே வீசப்பட்டது. இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்த போட்டி தான் குறைவான பந்துகளில் நிறைவடைந்த டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

1028 பந்துகள்- , ஆப்கானிஸ்தானுக்கு எதிராக(2018, பெங்களூர்)

1213 பந்துகள் – ஆஸ்திரேலியாவிற்கு எதிராக(2004, மும்பை)

1262 பந்துகள் – வெஸ்ட் இண்டிஸ்க்கு எதிராக (2013, மும்பை)

பெங்களூர் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் மிக குறைந்த ரன்.

பெங்களூர், சின்ன சாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 103 ரன்களை மட்டுமே குவித்தது. இது அந்த மைதானத்தில் இதுவரை நடந்த டெஸ்ட் போட்டியில், ஒரு அணி குவித்த மிக குறைந்த ரன்னாகும்.

103 – ஆப்கானிஸ்தான், 2018

112 – ஆஸ்திரேலியா,2017

116 – பாகிஸ்தான், 1987

afganistan1

தனது முதல் டெஸ்ட் போட்டியில் குறைவான பந்துகளை எதிர்கொண்ட அணி

இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 27.5 ஓவரிலும், இரண்டாவது இன்னிங்ஸில் 38.4 ஓவரிலும் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்த போட்டியில் மொத்தம் 399 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டது. இதனால் தனது முதல் டெஸ்ட் போட்டியில் குறைவான பந்துகளை எதிர்கொண்ட அணி என்ற பெயரை பெற்றுள்ளது.

399 பந்துகள் – ஆப்கானிஸ்தான்(2018, இந்தியாவிற்கு எதிராக)

656 பந்துகள் – நியூஸிலாந்து (1930, இங்கிலாந்திற்கு எதிராக)

663 பந்துகள் – தென்னாபிரிக்கா (1889, இங்கிலாந்திற்கு எதிராக)

Advertisement