சேஸிங்கின் போது ஏற்பட்ட தவறே தோல்விக்கு காரணம். ஏ.பி.டி போன்ற வீரர் தேவை – மோர்கன் வருத்தம்

Morgan
- Advertisement -

சென்னை மைதானத்தில் நேற்று நடைபெற்ற 5ஆவது டி20 லீக் போட்டி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்த போட்டியாக மாறியது. ஏனெனில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 152 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் கொல்கத்தா அணி அதனை எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெறும் என்று கருதி இந்த போட்டியில் சுவாரஸ்யம் இருக்காது என்று நினைத்தனர். ஆனால் சென்னை மைதானம் இரண்டாவது இன்னிங்சின் போது பவுலர்களுக்கு சாதகமாக மாறி போட்டியை சுவாரசிய படுத்தியது.

kkrvsmi

இந்த போட்டியின் சேஸிங்கில் முதல் 15 ஓவர்கள் வரை கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி ரன்களை வெற்றி இலக்கிற்கு அருகில் கொண்டு சென்றனர். 28 பந்துகளில் 31 ரன்கள் தேவைப்பட்ட போது இந்த போட்டி அப்படியே தலைகீழாக மாறியது. ஒரு கட்டத்தில் எளிதாக ஜெயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட கொல்கத்தா அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இறுதி ஐந்து ஓவர்களில் அவர்களால் 20 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.

- Advertisement -

கொல்கத்தா அணியை சேர்ந்த ராணா, மோர்கன், ஷாகிப், ரசல் என முக்கிய வீரர்கள் அனைவரும் தேவையின்றி ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதிவரை களத்தில் இருந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஆல் கூட இந்த சேப்பாக்கம் மைதானத்தில் பவுண்டரிகளை அடிக்க முடியாமல் போனது. எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி ஒரு மோசமான தோல்வியை இறுதியில் சந்தித்தது.

chahar

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் கூறுகையில் : நிச்சயம் இது ஒரு அதிருப்தியான போட்டி தான். தோல்வி அடைந்ததில் மிக வருத்தம் இருக்கிறது. இருப்பினும் இந்த போட்டியில் நாங்கள் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி உள்ளோம். சேசிங்கின் போது நாங்கள் மிகவும் சாதகமான சூழ் நிலையிலேயே இருந்தோம். ஆனாலும் மும்பை ஒரு வலுவான அணி அவர்கள் மீண்டு வந்து இந்த போட்டியை வெற்றி பெற்றுள்ளனர். இந்த போட்டியில் நாங்கள் சில தவறுகளை செய்து விட்டோம். அதை விரைவில் சரி செய்தாக வேண்டும்.

இந்த போட்டியில் நாங்கள் தைரியமாக விளையாட தவறி விட்டோம். இரண்டாவது பத்து ஓவரில் நாங்கள் தைரியமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. சேசிங்கின் போது இரண்டாவது பாதியில் தைரியமாக விளையாடவேண்டும். இந்த போட்டி முழுவதும் சிறப்பாக அமைந்தது. நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கான நல்ல நிலையில் இருந்தும் தோற்றத்தில் வருத்தம் இதுபோன்ற இக்கட்டான சேசிங்கின் அணி இக்கட்டான சூழ்நிலையில் தவிக்கும்போது ஏபி டிவில்லியர்ஸ் மும்பை அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடினார். அவரைப்போன்ற வீரர் அணிக்கு வேண்டும் என மோர்கன் குறிப்பிட்டு பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement