உலககோப்பை சூப்பர் ஓவரை வீச ஆர்ச்சரிடம் பந்தை கொடுத்தது இதற்காகத்தான் – மோர்கன் பகிர்ந்த சுவாரசிய தகவல்

Archer
- Advertisement -

நேற்று இங்கிலாந்து அணிக்கு கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத நாள். ஏனெனில் கடந்த ஆண்டு இதே நாளில்தான் நியூசிலாந்து அணிக்கு எதிராக உலக கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடி முதன் முறையாக இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. வரலாற்றில் இதுவரை நடக்காத ஒரு வகையில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டி சூப்பர் ஓவரில் வரை சென்று சூப்பர் ஓவரிலும் போட்டி சமன் ஆகி பின்னர் அதிக பவுண்டரி அடித்த அணி வெற்றி பெற்றது என்ற விதியின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Eng-1

- Advertisement -

அந்த விதியை சர்ச்சையை ஏற்படுத்தினாலும் உலக கோப்பையை இங்கிலாந்து அணி தான் கைப்பற்றியது என்று உறுதியாகிவிட்டது. மேலும் இந்த உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணம் யார் என்று கேட்டால் கிரிக்கெட் தெரிந்தவர்கள் அனைவரும் கூறும் பெயர் பென் ஸ்டோக்ஸ். அந்த அணியின் முன்னணி வீரரான இவர் கிட்டத்தட்ட தோற்றுவிடும் என்று முடிவான இந்தப்போட்டியில் கடைசி கட்டத்தில் தனி ஒரு ஆளாக நின்று 98 பந்துகளை சந்தித்து 84 ரன்கள் குவித்தார்.

அதேபோல அந்த போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் என்று கூறினால் அது மிகையல்ல. ஏனெனில் அந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் சூப்பர் ஓவரை வீசியது ஜோஃப்ரா ஆர்ச்சர் தான். அது மட்டுமின்றி அந்த ஆட்டம் முழுவதுமே அவர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார்.

Archer 1

இந்நிலையில் தற்போது கொரோனா ஓய்வு நேரத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் இந்த இறுதிப் போட்டி குறித்து பகிர்ந்த சுவாரசிய தகவல் இதுதான் : கொரோனா தாக்கம் காரணமாக வீட்டில் ஓய்வில் இருப்பதால் டிவியில் மூன்று முறை இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பார்த்து விட்டேன்.

- Advertisement -

ஒவ்வொரு முறையும் மீண்டும் மீண்டும் நான் இந்த போட்டியை பார்க்கும் போது அந்த பரபரப்பும், பதட்டமும் என்னுள் இருப்பதை உணர்கிறேன். மேலும் என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு போட்டி இது. அந்த போட்டியில் நான் பங்கேற்று விளையாடியதை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் சூப்பர் ஒரு குறித்து பேசிய மோர்கன் : நான் சூப்பர் ஓவரை வீச ஜோஃப்ரா ஆர்ச்சரை அழைத்ததற்கு காரணம் என்ன என்று பலரும் என்னிடம் கேள்வி எழுப்பினர்.

England

அதற்கு நான் கூறும் பதில் இதுதான் : ஜோஃப்ரா ஆர்ச்சரால் நிச்சயம் சிறப்பாக சூப்பர் ஓவரை வீச முடியும் என்று நினைத்தேன். அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை காரணமாகவே அந்த அழுத்தமான வேளையிலும் அவருக்கு நான் அந்த சூப்பர் ஓவரை வீச அனுமதி வழங்கினேன் அவரும் தனது திறமையை நிரூபித்து சிறப்பாக பந்துவீசினார் என்று மகிழ்ச்சியுடன் மோர்கன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement