இப்போதைக்கு டி20 உலகக்கோப்பை முக்கியமல்ல. கொஞ்சம் யோசிச்சி பாருங்க – வேண்டுகோள் வைத்த இங்கி கேப்டன்

Morgan
- Advertisement -

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கிரிக்கெட் போட்டியில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கான தொடர், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கான தொடர் , இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கான தொடர் என அனைத்தும் இந்த வைரஸ் காரணமாக உடனடியாக தள்ளிவைக்கப்பட்டது.

- Advertisement -

அதன் பின்னர் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரும் தள்ளிவைக்கப்பட்டது. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியதீற்கு கிட்டத்தட்ட 4000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் அடுத்து வரும் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான தொடர் நடைபெறவில்லை எனில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு கிட்டத்தட்ட 3,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

அதேபோல் இங்கிலாந்திற்கு 3100 கோடியும் இழப்பு ஏற்படப்போகிறது. இதனையெல்லாம் சமாளிக்கும் வகையில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் வாரியங்கள் வெகு சீக்கிரமாக கிரிக்கெட் போட்டிகளை துவங்க உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன் தற்போதைக்கு டி20 உலக கோப்பை தொடர் தேவையா? என்பது போல் கேள்வி எழுப்பி உள்ளார்.

Eng vs Nz

இதுகுறித்து அவர் கூறியதாவது… இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் டி20 உலக கோப்பை தொடரை எப்படி திட்டமிட்டபடி நடத்துவது என்பது தெரியவில்லை. ஆஸ்திரேலியாவில் ஆரம்பத்திலிருந்தே குறைவான தொற்று நோய் பரவி இருக்கிறது. அதனால் அந்த நாடு சமாளித்துக் கொள்ளும் என்று நினைக்கிறேன். ஆனால் மற்ற நாடுகளையும் ஐசிசி கருத்தில் கொள்ள வேண்டும்.

கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள வீரர்கள் மீண்டும் வெளியே வந்து பயிற்சியை தொடங்க பல மாதங்கள் ஆகும். 16 அணிகள் இந்த தொடரில் கலந்து கொள்கிறது. பலநாட்டு அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவிற்கு வருவார்கள். இதனால் ஆஸ்திரேலியாவும் பாதிப்படைய வாய்ப்புள்ளது. இதனை கருத்தில்கொண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் இயன் மார்கன்.

Advertisement