பெங்களூரு அணிக்கு எதிராக நான் செய்த இந்த தவறே தோல்விக்கு காரணம் – உணமையை ஒப்புக்கொண்ட மோர்கன்

Morgan
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 39 வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களை மட்டுமே குவித்தது.

RCBvsKKR

- Advertisement -

துவக்க வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன் பின்னர் எந்த இடத்திலுமே கொல்கத்தா அணியால் சிறப்பாக விளையாட முடியவில்லை. அதிகபட்சமாக மோர்கன் 30 ரன்களையும், லோகீ பெர்குசன் 19 ரன்களை குவித்தனர். பெங்களூரு அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 8 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பெங்களூரு அணியின் சிறப்பான பந்துவீச்சால் கொல்கத்தா அணி சுருண்டது என்றே கூறலாம்.

அதன் பின்னர் 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா பெங்களூரு அணி 13.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 85 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரர் படிக்கல் 25 ரன்கள் குவித்தார். அதன் பின்னர் குர்கீரத் சிங் 21 ரன்களும், விராட் கோலி 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணியின் பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

rcb

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் கூறுகையில் : போட்டியின் துவக்கத்திலேயே 4 – 5 விக்கெட்டுகளை நாங்கள் இழந்ததால் நாங்கள் நினைத்தபடி எங்களால் விளையாட முடியாமல் போனது. ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் அனைவரும் இந்த கண்டிஷனுக்கு எவ்வாறு பந்து வீசினால் சரியாக இருக்குமோ அவ்வாறு சிறப்பாக பந்து வீசினார்கள்.

- Advertisement -

இந்த போட்டியில் நாங்கள் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்திருக்க வேண்டும். அந்த இடத்தில் தவறு செய்து விட்டோம். இந்த போட்டியில் பெற்ற தோல்வியின் மூலம் பல்வேறு பாடங்களை கற்று உள்ளோம். இந்திய வீரர்கள் நல்ல திறனுடனும் உற்று நோக்கு பார்வையுடனும் செயல்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் இந்த மைதானத்தின் தன்மைக்கேற்ப பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.

அனைத்து அணிகளுக்கும் இடையே இது போன்ற பெரிய தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆகவேண்டும். ஆனால் நாங்கள் இந்த போட்டியில் அதனை செய்யத் தவறிவிட்டோம் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து இருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று மோர்கன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement