மும்பை அணிக்கு எதிராக எங்களது இந்த மோசமான தோல்விக்கு இதுவே காரணம் – மோர்கன் ஓபன் டாக்

Morgan
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 32 ஆவது போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பேட்டிங் செய்வதாக தேர்வு செய்தார்.

kkrvsmi

அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணி மிக மோசமாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 148 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கம்மின்ஸ் 53 ரன்களும் மோர்கன் 39 ரன்களை குவித்தனர். அதனை தொடர்ந்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 16.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 149 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.

- Advertisement -

அந்த அணியின் துவக்க வீரர் குவிண்டன் டிகாக் 78 ரன்களும் பாண்டியா 21 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி போட்டியை எளிதில் வென்று மீண்டும் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றது. ஆட்டநாயகனாக டிகாக் தேர்வானார்.

Dekock

இந்நிலையில் போட்டி முடிந்து பேசியே கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் எந்த இடத்திலுமே ஆட்டத்தில் இல்லை என்பது உண்மைதான். ஏனெனில் முதலில் பேட்டிங் செய்யும் போதே நான்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்ததால் அதிலிருந்து மீண்டும் நல்ல ஸ்கோரை கொண்டுவருவது என்பது கடினமான ஒன்று. அதிலும் குறிப்பாக மும்பை போன்ற சிறப்பான அணிகளுக்கு எதிராக விளையாடுவது மிகவும் கடினம்.

இருப்பினும் எங்களது வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். ஆனால் போதுமான அளவு ரன்களை குவிக்க வில்லை. நம்பர் 4, 5, 6 ஆகிய இடங்களில் அனுபவமிக்க வீரர்கள் இருந்தாலும் சூழ்நிலையை புரிந்து விளையாட வேண்டும் என்று தோல்வி குறித்து மோர்கன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement