சென்னை அணிக்கெதிரான தோல்விக்கு இதுமட்டுமே காரணம் – இயான் மோர்கன் வெளிப்படை

Morgan-1

ஐபிஎல் தொடரில் 49 ஆவது போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக நித்திஷ் ரானா 61 பந்துகளில் 87 ரன்களையும், சுப்மான் கில் 17 பந்துகளில் 26 ரன்கள் குவித்தனர். தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 21 ரன் குவிக்க கொல்கத்தா அணி 172 ரன்களை குவித்தது.

அதன் பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ருதுராஜ் 53 பந்துகளில் 72 ரன்களையும், அம்பத்தி ராயுடு 38 ரன்களும் குவித்தனர். இறுதிநேரத்தில் ஜடேஜா 11 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 3 சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரி என 31 ரன்களை அடித்து அசத்தினார். ருதுராஜ் ஆட்டநாயகனாக தேர்வானார்.

rana

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடியதாகவே நினைக்கிறேன். ஒரே ஒரு தவறான விடயம் யாதெனில் எங்களுக்கு டாஸ் சாதகமாக அமையவில்லை. ஏனெனில் இரண்டாவது பேட்டிங்கின் போது அவர்களுக்கு டியூ மிகவும் உதவியது. இந்த போட்டியில் எங்களது பேட்டிங் யூனிட்டை முன்னேற்றம் அடைய வைத்துள்ளோம். அதேபோன்று பௌலிங் எங்கள் அணியில் சிறப்பாக உள்ளது.

- Advertisement -

kkr

இன்னும் ஒரு போட்டியே எங்களுக்கு மீதமுள்ள நிலையில் ஒரு சிறிய வாய்ப்பு எங்களுக்கு உள்ளது நாங்கள் தற்போது சரியான இடத்தில் இருக்கிறோம் என கூறினார். நிதிஷ் ரானா இந்த போட்டியிலும் அவரின் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இன்றைய நாள் முடிவில் நாங்கள் சிறப்பாகவே பேட்டிங் செய்து உள்ளோம். வருண் மற்றும் நரேன் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள். கொல்கத்தா அணி வீரர்கள் யாரையும் நான் குறை கூற விரும்பவில்லை போட்டியில் தோற்றாலும் அடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியும் பெறுவோம் என மோர்கன் கூறியது குறிப்பிடத்தக்து.