கொல்கத்தா அணியில் எல்லோரும் இறங்கிய பிறகு நான் லேட்டா பேட்டிங் செய்ய இதுவே காரணம் – மோர்கன் பேட்டி

Morgan
- Advertisement -

சார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோதின. வழக்கம் போலவே போட்டி ஷார்ஜாவில் நடைபெறுவதால் அதிக ரன்கள் இந்த போட்டியில் அடிக்கப்படும் என்று எதிர்பார்த்தது போலவே முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 228 ரன்கள் குவித்தது.

rabada

- Advertisement -

அதன் பின்னர் 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடியது. கொல்கத்தா அணியின் அதிரடி வீரர்கள் நிறைந்துள்ளதால் இந்த போட்டியில் நிச்சயம் கொல்கத்தா அணி வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ரசல், தினேஷ் கார்த்திக், சுப்மான் கில் என முக்கியமான வீரர்கள் பலரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததும் கொல்கத்தா அணி தோல்வியை நோக்கி சென்றது.

இருப்பினும் இறுதி நேரத்தில் திரிபாதி மற்றும் மோர்கன் ஜோடி ஆகியோர் அதிரடியாக ரன்களை சேர்த்தனர். மேலும் ஒரு கட்டத்தில் போட்டியும் பரபரப்பானது. ஏனெனில் மோர்கன் 18 பந்துகளில் 44 ரன்களும், திரிபாதியும் சில ரன்களை குவித்தனர். இறுதியில் கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

dc

இந்த போட்டியில் மோர்கன் சற்று முன்பே பேட்டிங் இறங்கி இருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் அவரது பேட்டிங் ஆர்டர் குறித்துப் பேசிய இயான் மோர்கன் கூறுகையில் : எங்களுடைய அணியின் பேட்டிங் ஆர்டரை பார்க்கும் போது அதிகளவில் மேட்ச் வின்னர்கள் உள்ளனர். அவர்களை தாண்டி என்னால் முன்பு இறங்கமுடியாது.

Morgan

ஏனெனில் ரசல் போன்ற அதிரடி வீரர்கள் இருக்கும்போது என்னால் முன் கூட்டியே இறங்கி விளையாட முடியாது. ஏனெனில் ரசல் நம்ப முடியாத வகையிலான ஹிட்டர். அதே போன்று சிலர் இருப்பதால் அவர்களுக்கு ஏற்றார் போல சில பேட்டிங் ஆர்டர் மாற்றம் இருக்கும். அதனால் தான் நான் பின்வரிசையில் விளையாடுறேன். இருப்பினும் நேற்றைய போட்டியில் கடைசி 8 பந்துகளில் இருக்கும்போது நாங்கள் நல்ல நிலையிலேயே இருந்தோம். டெல்லி அணி சிறப்பாக பந்து வீசி எங்களை தோற்கடித்தனர் என்று அவர் கூறினார்.

Advertisement