- Advertisement -
உலக கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கு அந்த முன்னாள் இந்திய ஜாம்பவான் பயிற்சியாளராக வந்தா நல்லா இருக்கும் – இயான் மோர்கன் கருத்து

இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது கடந்த 2019-ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையை வென்று அசத்தியது. அதைத் தொடர்ந்து கடந்த 2022-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையும் கைப்பற்றி அசத்தியது. அதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தற்போது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மிக சிறப்பான அணியாக வளர்ந்து நிற்கிறது.

இப்படி இங்கிலாந்து அணியின் வளர்ச்சி சமீப காலத்தில் அதிகரித்து கொண்டே வரும் வேளையில் அந்த அணி வெள்ளை பந்து கிரிக்கெட்டிற்கு தனி பயிற்சியாளரையும், சிகப்பு பந்து கிரிக்கெட்டுக்கு தனி பயிற்சியாளரையுயும் வைத்து அசத்தி வருகிறது. டெஸ்ட் போட்டிகளுக்கு பிரண்டன் மெக்கல்லம் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

- Advertisement -

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு மேத்யூ மாட் என்பவரும் பயிற்சியாளராக இருந்து வந்தனர். தற்போது இங்கிலாந்து அணியின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகி இருக்கிறார். இதன் காரணமாக தற்போது இடைக்கால பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் வீரரான மார்க்கஸ் டிரஸ்கோத்திக் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் அளித்துள்ள பேட்டியில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக வந்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : தற்போது இங்கிலாந்து அணி புதிய பயிற்சியாளரை தேடுகிறது. என்னை பொறுத்தவரை டிராவிட், பாண்டிங், பிளமிங் போன்ற ஜாம்பவான்களில் ஒருவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால் அது நன்றாக இருக்கும்.

- Advertisement -

ஒருவேளை வேறு யாரும் தேவையில்லை என்று நினைத்தால் மெக்கல்லமே ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் பயிற்சியாளராக இருக்கலாம். ஏனெனில் அவரது பயிற்சியின் கீழ் நமது அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று மோர்கன் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளராக இருந்த டிராவிடின் தலைமையின் கீழ் இந்திய அணி டி20 உலக கோப்பை கைப்பற்றி இருந்தது.

இதையும் படிங்க : சச்சினின் 18 ஆண்டுகால சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி.. 152 ரன்கள் தான் தேவை – விவரம் இதோ

அதனைத்தொடர்ந்து தனது குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். அதன் காரணமாக இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக நிச்சயம் அவர் மாற வாய்ப்பில்லை என்றாலும் ஐபிஎல் தொடரின் போது ஏதாவது ஒரு அணிக்கு கண்டிப்பாக அவர் பயிற்சியாளராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -