இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது இன்று ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. கொழும்பு நகரில் நடைபெற இருக்கும் இந்த ஒருநாள் தொடருக்காக தற்போது இரண்டு அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.ர் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்திய அணிக்கு திரும்பியிருப்பதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று கொழும்பு நகரில் நடைபெற இருக்கும் இந்த ஒருநாள் தொடரின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சச்சினின் சாதனையை முறியடித்து மாபெரும் உலக சாதனை ஒன்றை படைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் போது நியூசிலாந்து அணிக்கு எதிராக தனது ஐம்பதாவது சதத்தை அடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி நிகழ்த்தி இருந்தார்.
இந்நிலையில் மேலும் சச்சின் டெண்டுல்கரின் ஒரு சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி இந்த இலங்கை தொடரில் 152 ரன்கள் அடித்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் 14,000 ரன்களை தொட்ட மூன்றாவது சர்வதேச வீரர் என்ற பெருமையை பெறுவார்.
இவருக்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் சங்கக்காரா ஆகியோர் இந்த மைல் கல்லை எட்டியுள்ள வேளையில் தற்போது விராட் கோலி அந்த பட்டியலில் இணைய காத்திருக்கிறார். சச்சின் தனது 350-ஆவது இன்னிங்ஸ்சிலும் சங்கக்காரா தனது 378 இன்னிங்சிலும் 14000 ரன்களை கடந்திருந்த வேளையில் தற்போது விராட் கோலி தனது 280 இன்னிங்ஸ்சிலயே அந்த சாதனையை நெருங்கியுள்ளார்.
இதையும் படிங்க : ஐபிஎல் வெச்சு ரசிகர்கள் தப்பு கணக்கு போட்டாங்க.. இந்தப் பையன் ஸ்பெஷல் பிளேயரா வருவாரு.. டிகே பாராட்டு
இதன் காரணமாக இன்னும் 152 ரன்கள் அடிப்பதன் மூலம் வெகுவிரைவாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 14000 ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைக்க காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.



