தோனியின் 322 போட்டிகளில் செய்த சாதனையை வெறும் 163 போட்டிகளிலேயே ஊதி தள்ளிய மோர்கன் – விவரம் இதோ

Morgan

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 49.5 அவர்களுக்கு 329 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

Morgan

இந்த போட்டியில் அதிகபட்சமாக கேப்டன் இயான் மோர்கன் 84 பந்துகளை சந்தித்து 106 ரன்கள் குவித்தார். இதில் (நான்கு சிக்சர்களையும், 15 பவுண்டரிகளையும்) விளாசினார். இந்த 4 சிக்ஸர் மூலம் அவர் கேப்டனாக ஒரு பெரிய உலக சாதனை படைத்துள்ளார்.

அது யாதெனில் இதுவரை ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக அதிக சிக்சர்கள் விளாசியவர் என்ற பெருமையை தோனி (322 ஆட்டத்தில் 211 சிக்சர்கள்) அடித்து வைத்திருந்தார். இந்த சாதனையை நேற்று மோர்கன் முறியடித்தார். மொத்தம் 163 போட்டிகளில் விளையாடியுள்ள மோர்கன் 215 சிக்ஸர்களை விளாசி அதிக சிக்சர்கள் விளாசி கேப்டன் என்ற பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 329 ரன்கள் குவித்தாலும் அயர்லாந்து அணி அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது. இருப்பினும் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -