கிரிக்கெட் போட்டிகளை நடத்த ஐ.சி.சி க்கு புதிய வித்தியாசமான ஐடியாவை கொடுத்த மோர்கன் – ரூல்ஸ் இருக்கா ?

Morgan
- Advertisement -

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தள்ளி வைக்கப்படும் ரத்து செய்யப்பட்டும் வருகின்றது. மேலும், இங்கிலாந்தில் வரும் மே மாதம் 28ஆம் தேதி வரை அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளும் தடைசெய்யப்பட்டுள்ளன.

aus vs eng

- Advertisement -

இதனால் இங்கிலாந்தில் உள்ளூர் தொடங்கும் முழுவதும் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
இதற்கு இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் ஒரு வழியை கூறியுள்ளார். ஜூன் மாதத்தில் மேற்கிந்திய தீவுகள் அல்லது பாகிஸ்தான் போன்ற அணிகளை இங்கிலாந்தின் இரண்டு அணிகளை வைத்து முத்தரப்பு தொடரில் விளையாட வைக்கலாம்.

ஜோ ரூட் தலைமையிலான டெஸ்ட் அணியையும் என் தலைமையிலான ஒருநாள் அணியையும் களமிறக்கி அவர்களுடன் விளையாடினால் நன்றாக இருக்கும். முன்னதாக இங்கிலாந்தில் சிகிச்சைக்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்களை வாங்க நிதி திரட்டும் வகையில் அந்த அணியின் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் தனது உலக கோப்பை ஜெர்ஸியை ஏலம் விடுவதாக அறிவித்துள்ளார்.

England

அதன் மூலம் கிடைத்த பெருந்தொகையை அந்த நாட்டின் மருத்துவ உபகரணங்கள் வாங்க பயன்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அந்த காணொளி பதிவை ரீட்வீட் செய்யுமாறு விராட் கோலி ,ஸ்டீவன், ஸ்மித் சுரேஷ் ரெய்னா ஆகிய பல வீரர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இயான் மோர்கன் கொடுத்த இந்த ஐடியாவை இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் ஏற்குமா ? மேலும் இதற்கான விதிமுறை இருக்கிறதா என்பதை எல்லாம் முடிவு செய்தே இந்த ஐடியா செயல்படுமா என்பது தெரியும்.

Eng

கொரோனா தீவிரத்தின் காரணமாக மீண்டும் எப்போது போட்டிகள் துவங்கும் என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement