மே.இ அணிக்கு எதிரான முதல் டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு – கேப்டன் ஜோ ரூட் விலகல்

England
- Advertisement -

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக உலகளவில் எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் தொடரும் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது ஜூலை 8 ஆம் தேதி சவுதாம்ப்டன் நகரில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது.

wivseng

3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்னர் இங்கிலாந்து வந்து பல கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு பயிற்சியை மேற்கொண்டு தற்போது இந்த கிரிக்கெட் போட்டியில் விளையாட தயாராக உள்ளது. இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

- Advertisement -

இந்நிலையில் தற்போது முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மூலமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 13 பேர் கொண்ட இந்த அணியில் இங்கிலாந்து அணியில் ஆல் ரவுண்டர் ஆன பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

Stokes

அதற்கு காரணம் யாதெனில் அவரது மனைவிக்கு இரண்டாவது குழந்தை பிறக்க இருப்பதால் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை மேலும் மோசமான பார்ம் காரணமாக அதிரடி விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ விளையாடவில்லை. மொயின் அலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக விடை கொடுத்துள்ளார் என்பதால் அவரும் அணியில் இல்லை.

இங்கிலாந்து அணி நிர்வாகம் அறிவித்த அணி இதோ : 1. பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), 2. ஜேம்ஸ் ஆண்டர்சன், 3. ஸ்டூவர்ட் பிராட், 4. ஜாஃப்ரா ஆர்சர், 5. டாம் பெஸ், 6. ரோரி பேர்ன்ஸ், 7. ஜோஸ் பட்லர், 8. ஜாக் கிராவ்லி, 9. ஜோ டென்லி, 10. ஒல்லி போப், 11. டாம் சிப்லி, 12. கிறிஸ் வோக்ஸ், 13. மார்க் வுட்.

Advertisement